Oceas

ஊரே சோகக் கடலில்.. ஏறாவூர் இரட்டை கொலையுண்ட ஜனாசாக்கள் இன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது !!




ஏறாவூர் இரட்டை கொலையுண்ட ஜனாசா இன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது !!

 ஏராளமான பொதுமக்கள் ( ஊரில் உள்ள அனைவரும் ) கலந்து மஸ்ஜிதுல் நூறுஸ் சலாம்  (காட்டுப்பள்ளி) யில் இரவு ஒன்பது மணியளவில் நல்லடக்கம் செய்யபட்டது.

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டன.

நூர்முஹம்மது ஹுஸைரா (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணு (வயது 32) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைக்காக நேற்றையதினம் அழைத்துச்செல்லப்பட்ட 5 பேரில் 4 பேர் குறித்த வீட்டுக்கு அடிக்கடி சென்றுவருபர்கள். மற்றையவர் குடும்ப உறவினராவார்.

சடலங்களுக்கு அருகில் 3 அலைபேசிகள் காணப்பட்டதுடன், அவற்றிலொன்று ஏற்கெனவே செயலிழந்திருந்தது. கொல்லப்பட்ட 32 வயதுடைய பெண் சம்பவதினத்தன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டாரிலிருந்த அவரது கணவருடன் 14 நிமிடமும் 14 செக்கன்களும் அலைபேசியில் உரையாடியிருந்தமை தொடர்பிலும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறிருக்க, சம்பவ தினத்தன்று கொலை இடம்பெறுவதற்கு முன்னரும் அதன் பின்னரும் கொலை இடம்பெற்ற வீட்டை அண்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நடமாடித்திரிந்தமை தொடர்பில் அங்குள்ள பலசரக்குக் கடை மற்றும் வீடொன்றிலும் பொருத்தப்பட்டிருந்த கமெராக்களில் பதிவாகியுள்ளது.

எனினும், இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் தெளிவாகத் தெரியவில்லை. அம்மோட்டார் சைக்கிள் பற்றிய விவரத்தைக்; கண்டறிவதற்காக பரிசோதனை செய்யும் பொறுப்பு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.





ஊரே சோகக் கடலில்.. ஏறாவூர் இரட்டை கொலையுண்ட ஜனாசாக்கள் இன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது !! ஊரே சோகக் கடலில்.. ஏறாவூர் இரட்டை கொலையுண்ட ஜனாசாக்கள்  இன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது !! Reviewed by Madawala News on 9/13/2016 10:44:00 PM Rating: 5