Accaddemy

சவுதி அரேபியாவில் சம்பளம் குறைப்பு .



சவுதி அரேபியாவில் அரசாங்க சேவையாளர்களின் சம்பளத்தை குறைக்க புதிய செயல்முறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேவியாவில் இதுவரை செயல்படுத்தப்படாத செயன்முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை குறையும் நிலையில், செலவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக சவுதி அரேபியா இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி அமைச்சர் ஒருவரின் சம்பளம் நூற்றுக்கு 20 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதுடன், சூரா சபை ஆலோசனையாளர்களின் வீடு மற்றும் மோட்டார் வாகனத்திற்காக பெற்று கொடுக்கப்பட்டுள்ள வசதி கட்டணமும் நூற்றுக்கு 15 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஆரம்ப அரச சேவையாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேலதி கொடுப்பனவு மற்றும் வருடாந்த விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சம்பளம் குறைப்பு . சவுதி அரேபியாவில் சம்பளம் குறைப்பு . Reviewed by Madawala News on 9/27/2016 10:24:00 PM Rating: 5