உண்மையான நிலைமை தான் என்ன? எதற்காக கெட் அவுட் சொல்ல வேண்டும்?


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் நேற்று (26.09.2016) வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்த வேளை, அங்கு உயர் கல்வி கற்றும் மாணவிகள் எங்களுக்கு அரசியல் விஞ்ஞானப்பாடம் கற்பித்த ஆசிரியை இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகவும், அதனால் கடந்த ஒரு மாத காலமாக பாடம் இடம்பெறவில்லையென்றும், அதனால் எங்களுக்கு ஆசிரியர் ஒருவரை நியமித்துத் தருமாறும் மாகாண சபை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்திற்குச் சென்று, வலயக் கல்விப்பணிப்பாளருடன் இது தொடர்பாக உரையாடும் போது, மாகாண சபை உறுப்பினர் வலய கல்விப்பணிப்பாளருக்கெதிராக தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தார் என்றும், அதற்கு வலைய கல்வி பணிப்பாளர் கெட் அவுட் எனும் ஆங்கில வர்த்தையினை பாவித்து மாகாண சபை உறுப்பினரை வெளியேற்றியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வலய கல்விப்பணிப்பளரிடம் மன்னிப்புக்கோர வேண்டுமென்றும் கோரியே நேற்று 27.09.2016 சுகயீன விடுமுறையில் ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலக பாடசாலைகளின் அதிபர்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்ததோடு, இது தொடர்பான மகஜரொன்றினையும் ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.எல்.ஏ.ஜூனைட் அவர்களிடம் கையளித்திருந்தனர்.


இது சமபந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான சுபைர் ஹாஜியினை தொடர்பு கொண்டு வினவிய பொழுது கடந்த 26ம் திகதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலையத்தினுடைய அதிபர் பரீட் 26ம் திகதி பாடசாலை நிகழ்வொன்றில் தன்னை கலந்து கொள்ளுமாறு அழைத்தற்கேற்ப நான் தனது மாகான சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட அலுவலக தளபாடங்களை கையளிப்பதற்காக சென்றிருந்தேன். அந்த நிலையிலே பாடசலை நிகழ்வில் தான் கலந்து கொண்டதற்கு பிற்பாடு பாடசலையினை விட்டு வெளியேறுகின்ற நிலையில் உயர்தரத்தில் கல்வி பயிலுகின்ற 42 மாணவிகள் என்னை சுற்றி வளைத்துகொண்டர்.

சுற்றிவளைத்தவர்கள் என்னிடம் சுமார் ஒரு மாதகாலமாக எங்களுக்கு அரசியல் விஞ்ஞான பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லாமல் இருக்கின்றது. எங்களுக்கு ஏற்கனவே அரசியல் விஞ்ஞான பாடம் கற்பித்த ஆசிரியை எந்த வித பதிலீடும் இல்லாமல் மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து கல்முனை கல்வி வலயத்திற்கு முதலமைச்சரின் சிபாரிசின் பெயரில் இடமாற்றப்பட்டமையாகும் என தெரிவித்தார்கள்.

 இதனால் எங்களுடைய கல்வியினை தொடர முடியாத வண்ணம் பெரும் அநியாத்தினை எங்களுக்கு செய்துள்ளார்கள் என என்னிடம் முறையிட்டார்கள். அத்தோடு இதற்கான பதிலினை உடனடியாக நீங்கள் எங்களுக்கு தருவதோடு இதற்கான ஆசிரியரையும் பெற்றுத்தர வேண்டும் என கூறினார்கள். அதற்கு நான் மாணிவிகளிடத்தில் மாகாணா கல்வி பணிப்பாளருடனும் வலய கல்விப்பணிபாளருடனும் தொடர்பு கொண்டு இதற்கான மாற்றீடினை செய்து தருவதாக கூறி பாடசாலையினை விட்டு வெளியேறினேன்.


அத்தொடு மாகாண கல்வி பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு இது சமபந்தமாக தெரிவித்தேன். அவர் தனக்கு அதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக தெரிவித்தார். அதேபோல் நான் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் சென்று வலயகல்வி பணிப்பாளருக்கு கைலாகு செய்து குறித்த விடயம் சம்பந்தாமக தெரிவித்ததோடு மிக விரைவில் குறித்த பாடசாலை மாணவிகளின் எதிர்கால கல்வி நடவடிக்கையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் வலய கல்வி பணிப்பாளரே இதற்கான பதில் நடவடிக்கையினை எடுக்க முடியும் என கூறிய வேலையில் அவர் என்னிடத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது நீங்கள் மாகாண கல்விபணிப்பாளரிடம் கதைக்கும் படி வேண்டினார். தொடர்ந்து அவர் தான் இந்த இடமற்றத்தினை செய்ய வில்லை என்றும் கூறினார்.


அதற்கு நான் மாற்றம் செய்யபட்ட விடயத்தினை மட்டும் நான் கதைக்க வரவில்லை. இதற்கு மிக விரைவில் நீங்கள் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கூறினேன். அப்பொழுது வலய கல்வி பணிப்பாளர் எனக்களித்த பதில்கள் எனக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. குறிப்பாக அவர் என்னிடத்தில் கூறினார் மாகான சபையிலும் பொது கூட்டங்களிலும் என்னைபற்றி விமர்சித்து வருபவராக இருக்கின்றீர்கள்.

இவ்வாறு என்னை நீங்கள் விமர்சித்து விட்டு என்னிடம் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முனைகின்ற உங்களுக்கு உங்களினுடைய ஊரான ஏறாவூரிலே அதிகமான பாடசாலைகள் இருக்கின்ரது ஆகவே நீங்கள் ஏன் வெளியூர் பாடசலைகளின் பிரச்சனைகளில் மூக்கை நுளைக்க வேண்டும் எனக் கேட்டார்.

இந்த நிலையில் நான் குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேலையில் இடம் பெற்ற சம்பவத்தினையே உங்களிடம் முறைப்பட்டுள்ளேன் எனக் கூறியும் மேலும் தன்னை வலய கல்வி பணிப்பாளர் கடிந்து கொண்டதாக தெரிவித்தார். அதனால் ஆத்திரமடைந்து நீங்கள் இவ்வாறான கதிரையில் உட்கார்ந்து கொண்டு இவ்வாறு கதைக்க முடியாது என்று கூறிய வேலையிலே அவர் தன்னை வெளியேறுமாறு கெட் அவுட் கூறினார். இவ்வாறான சூழ் நிலையில்தான் தனக்கும் வலய கல்வி பணிபாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பொலீசில் முறைப்பாடும் செய்யப்பட்டு நீதி மன்றம் வரைகும் செல்லக்கூடிய சூழ் நிலைக்கு எங்களை தள்ளியது.

ஆனால் தனக்கும் வலய கல்வி பணிபாளருக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த பிரச்சனைகளும் இல்லை எனக்கூறிய மாகாண சபை உறுப்பினர் வலய கல்வி பணிபாளராக சேகு அலி வருகை தந்த காலத்திலிருந்து நான் எதனையும் அவரிடம் அரசியல் ரீதியாக கேட்டதும் இல்லை வற்புறுத்தியதும் இல்லை. பிரதேச வாதத்திற்கு அப்பால் நின்றே எமது கல்வி வலயம் தேசியத்திலே வலமை போல முதலாம் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சக ஒத்துளைப்புக்களையும் வலய கல்வி பணிப்பாளருக்கு வழங்கி வருகின்றோம்.

ஆனால் வலய கல்வி பணிப்பாளர் ஏற்கனவே நான் அவரினை கடிந்து கொண்ட சந்தர்ப்பங்களை மனதில் வைத்துக்கொண்டு என்னை பழிவாங்கும் செயலாக அன்று தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதனையும் மறந்து குறித்த செயலினை அரங்கேற்றினார் என்றேஎன்ன தோன்றுகின்றது. அத்தோடு அவர் தனது காரியாலையத்தினை விட்டு கெட் அவுட் வெளியேறு என்று கூறிய வார்த்தையானது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியதுடன் மேலும் என்னுடைய ஆத்திரத்தினை தூண்டுவதாக அமைந்திருந்தது.

அதிபர்கள் எல்லோரும் உங்களுடைய செயலினை கண்டித்து சுகயீன விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கபடுகின்றதே என வினவிய பொழுது… ஏறாவூரில் இருக்கின்ற எந்த பாடசாலையின் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் இருக்கவில்லை எனவும் ஓட்டமாவடி பிரதேச எல்லைக்குள் உள்ள பாடசலைகளின் அதிபர்களே சுகயீன விடுமுறையில் 27ம் திகதி இருந்தாக தெரிவித்த மாகாண சபை உறுப்பினர். வலய காரியாலையத்தில் கடமையாற்றுகின்றவர்கள்தான் தனக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

கடைசியாக தானும் வலய கல்வி பணிப்பாளரும் ஒரே சமூகத்தினை சேர்ந்தவர்கள். அத்தோடு அவர் நீண்டகாலமாக கல்வி பணியிலே ஈடுபட்டு வருகின்றவர். ஆகையால் தொடர்ச்சியாக இந்த விடயத்தில் முண்டியிட்டுக்கொண்டு சண்டையிடுவதற்கு நான் தயாரில்லை.

ஆகவே எதிர்காலத்தில் அவருடய மனநிலையினை பொறுத்து அவர் சமாதான நிலைக்கு வருவாராயின் தான் சமாதானம் செய்துகொள்ள தயாரகா இருப்பதாக தெரிவித்த சுபைர் ஹாஜி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சுகயீன விடுமுறையில் அதிபர்கள் நிற்பது என்பவற்றுகெல்லாம் பயந்து அரசியல் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் அரசியல்வாதியாக நான் ஒருபொழுதும் இருக்க போவதிலை என்று ஆணித்தரமாக கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் ஹாஜி.. குறித்த விடயம் சமப்ந்தமாக வலய கல்வி பணிப்பாளரை சந்தித்து வினவிய பொழுது தாங்கள் பொலீசிலே முறைப்பாடு செய்து நீதிமன்றத்தின் தீர்பிற்காய் காத்திருப்பதாகவும் தற்பொழுது சுமூகமான நிலைமையே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

உண்மையான நிலைமை தான் என்ன? எதற்காக கெட் அவுட் சொல்ல வேண்டும்? உண்மையான நிலைமை தான் என்ன? எதற்காக கெட் அவுட் சொல்ல வேண்டும்? Reviewed by Madawala News on 9/28/2016 12:34:00 PM Rating: 5