Accaddemy

தலாக் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் பதிலும் .



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 

பிடிக்காத மனைவியை கொலை செய்வதை விட 3 தலாக் எனப்படும் முத்தலாக் அளித்து திருமண உறவை முறிப்பது மேலானது என முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மூன்று தடவை தலாக் என்று கூறி திருமண உறவை முறிப்பது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சமுதாய சீர்திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மையினரின் தனிசட்டங்களை மாற்றி எழுத முடியாது என அதில் வாரியம் தெரிவித்துள்ளது.

கசப்பான திருமண உறவுகளில் நீதிமன்றத்தில் விவகாரத்து பெற நீண்டநாள் காத்திருக்கும் நிலையை சுட்டிக்காட்டியுள்ள வாரியம் சில நேரங்களில் கணவனே மனைவியை கொல்வதென நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரை இழப்பதை விட மூன்று தலாக்குகளில் உறவை முறிப்பது எவ்வளவோ மேல் என்பது வாரியத்தின் வாதம். ஆனால் முத்தலாக் முறை ஒழிக்கப்பட வேண்டும் என பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் என்ற அமைப்பு கூறியுள்ளது.

ஆண்கள் முத்தலாக் கூறுவது போல பெண்களும் குழா என்ற முறையில் விவாகரத்து பெறுவதற்கான வழிமுறைகள் இருப்பதை முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் தனிநபர் சட்டத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதை நீதிமன்றத்தில் அது நினைவூட்டியுள்ளது.
தலாக் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் பதிலும் . தலாக் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் பதிலும்  . Reviewed by Madawala News on 9/02/2016 11:25:00 PM Rating: 5