Free Space

உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் ‘புகை இல்லாத ரயில்’ ஜெர்மனியில் தொடங்கப்பட்டது.




பிரான்சிலுள்ள “Alstom” நிறுவனம் தயாரித்த உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் நடைபெறும் “Berlin InnoTrans Trade Show” எனும் வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

“hydrail” எனும் இந்த குறிப்பிட்ட ரயில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஹைட்ரஜன் எரிவாயு மூலம் செயல்படும். இந்த ரயிலின் கூரை மீது ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரயில் இயங்குவதால் புகை உள்ளிட்ட எதுவும் வெளியாகாது.

மேலும், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் ஒரு ரயில் 600 Km முதல் 800 Km வரை பயணமாகும். மணிக்கு 140Kmph வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் என்றும் தொலைதூர பயணங்களுக்கு இந்த ரயில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த பயணிகள் ரயில் எதிர்வரும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜெர்மனியில் உள்ள Lower Saxony மாகாணத்தில் தான் இந்த நவீன ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

H B றிஸ்வானுஸ் ஸமான்    கொழும்பு.
உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் ‘புகை இல்லாத ரயில்’ ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் ‘புகை இல்லாத ரயில்’  ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. Reviewed by Madawala News on 9/24/2016 06:45:00 PM Rating: 5