Free Space

பதுளையில் உலமாக்களுக்காக நடைபெற்று முடிந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி. (படங்கள்)



  புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு பதுள்ளை "Good Luck " அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களுக்கான மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி பதுள்ளை கிரிகெட் மைதானத்தில் 17,18ம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெற்றது.

  இத்தொடரில் நாட்டின் நாளா பாகத்திலிருந்தும் 24 அணிகள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டினர். இறுதியில் போட்டியை நடாத்திய பதுள்ளை Good Luck ,அட்டாளச்சேனை Arabian ,மாத்தளை Avengers மற்றும் மாத்தறை Southern Worries ஆகிய 4 அனிகள் இறுதுச்சுற்றுக்கு தெரிவாகியிருந்தாலும், Southern Worries மற்றும் Avengers அணிகள் இருதிப்போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டனர்.

   பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் மாத்தறை southern worries அணியினர் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டனர்.

இரண்டாம் இடத்தை மாத்தளை Avengers அணியும் மூன்றாம் இடத்தை பதுள்ளை Good Luck அணியும் நான்காம் இடத்தை அட்டாளச்சேனை Arabian அணியினரும் தட்டிச்சென்றனர். சிறந்த பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் தொடர் நாயகன் போன்ற விருதுகளும் வழங்கப்பட்டன.

சிறந்த பந்துவீச்சாளராக southern Worries அணியின் பஸால் மெளலவியும், இருதிப்போட்டியின் நாயகனாக Southern Worries அணியின் அணித்தலைவர் முஅவ்வித் மெளலவியும் தெரிவு செய்யப்பட்டனர்.

நோன்புப்பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டித்தொடரிலும் southern worries அணி சம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியை பதுள்ளை குட்லக் அணியினர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜஸாகுமுல்லாஹுகைரா.

தகவல்
ரஸான் southern worries அணி










பதுளையில் உலமாக்களுக்காக நடைபெற்று முடிந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி. (படங்கள்) பதுளையில் உலமாக்களுக்காக நடைபெற்று முடிந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி. (படங்கள்) Reviewed by Madawala News on 9/19/2016 04:51:00 PM Rating: 5