Ad Space Available here

உழ்ஹிய்யா பற்றிய மகாஸிதியப் பார்வை.அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி 

உழ்ஹிய்யா என்ற வணக்கம் அனைத்து மனிதர்களும் பெருநாள் தினங்களில் சந்தோஷமாக இருப்பதற்கே விதியாக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் இஸ்லாமிய சட்டவிதிகள் முஸ்லிம்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கும் அதே நேரம் முஸ்லிமல்லாதவர்களுக்கு தொந்தரவாக அமையும் பட்சத்தில் அந்த வணக்கம் குறைபாடுள்ளதாகவே இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

உழ்ஹிய்யாவின் உன்னத இலக்குகளை
அடைந்து கொள்வதற்கு அதனை ஊரின் தலைமை பள்ளிவாசலினூடாக கூட்டாக கொடுப்பதே சிறந்த வழியாகும்,
குடும்பத்தில் ஏழைகளை ஒதுக்கி விட்டு வசதி படைத்தவர்கள் மட்டும் உழ்ஹிய்யாவை  தமக்குள்ளே பங்கு வைத்துக்கொள்வதாலும் தமக்குள் மாத்திரம் சந்தோஷங்களை பரிமாறிக் கொள்வதாலும் ஒரு பொழுதும் அதன் நன்மையை முழுமையாக அடைந்து கொள்ள முடியாது.

பள்ளிவாசலில் கூட்டாக கொடுக்கின்ற போது பிற மத சகோதரர்களின் உணர்வுகளை காயப்படுத்தி
தாம் மட்டும் சந்தோஷமாக
இருக்க நினைப்பதுவும் இதன் உன்னத இலக்குகளை அடைந்து கொள்வதை விட்டும் எம்மை தூரமாக்கி விடுகின்றது.

உர் ஒற்றுமை என்ற அடிப்படையில் பள்ளிவாசல்களை மையப்படுத்தி குர்பானி கொடுக்க முயலும் போது அங்கு மாடுகளை அதிகமாக கட்டி வைக்க வேண்டியேற்படும், இது மாற்று மத சகோதரர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம் அந்த வெறுப்பு இஸ்லாம் பற்றிய தப்பான பார்வையை அவர்களிடத்தில் விதைத்துவிட அதிக வாய்ப்பிருக்கிறது.

எனவே முடியுமான வரை உழ்ஹிய்யா பிராணியை பிற மத சகோதரர்கள் பார்க்க முடியாத மறைவான இடத்தில் அறுப்பது நல்லது பெருநாள் தவிர்ந்த அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் நிலமைகளை அவதானித்து சூரியன் உதயமாக முன்னரும் அது மறைந்த பின்னரும் இறைச்சிகளை விநியோகிப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும், மேலும் உழ்ஹிய்யா கொடுக்கும்போது அரச விதிமுறைகளை மீறாது நடந்துகொள்ளவேண்டும்,

உழ்ஹிய்யா பிராணிகளை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டால் விற்பவரின் இடத்திலேயே வைத்து அறுத்து இறைச்சியை மறைவான பைகளிலிட்டு கொண்டு செல்ல வேண்டும்,
ஆடு மாடுகளை கொண்டுவருதல், கட்டிவைத்தல், அறுத்தல், பங்கிடல், துப்பரவு செய்தல், விநியோகித்தல், போன்ற எல்லாக் கட்டங்களையும் பிற மத சகோதரர்களின்  பார்வையிலிருந்து முடியுமானவரை மறைத்தேசெய்ய வேண்டும்.

இஸ்லாம் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றது என்ற வகையில் ஆடு மாடு போன்றவற்றை அறுப்பதனால் வெளியேறக்கூடிய இரத்தத்தை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும், அத்துடன் அவற்றின் கழிவுகளை நிலத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும். அல்லது நன்றாக பைகளில் வைத்து கட்டி பொதி செய்து குப்பை அள்ளுவோரிடம் கையளிக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் வீசவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அவைகளை குப்பைக்குள் வீசுவோர் நாற்றம் எடுக்காத வகையில் பொதி செய்து அவற்றை வீச வேண்டும். சூழலை மாசுபடுத்தாது அடுத்து வரும் ஆண்டுகளில் நமது அசிங்கமான செயற்பாடுகளால் இந்த வணக்கத்திற்கே தடையேற்படாதிருக்க இவ்வருடத்தின் செயற்பாடுகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும்
இறைவனின் திருப்பொருத்தத்தை இலக்காகக் கொண்டு இந்த வணக்கத்தில் பேண வேண்டிய மேற்சொன்ன வணக்கங்களையும் கடைப்பிடிப்போமாக.
உழ்ஹிய்யா பற்றிய மகாஸிதியப் பார்வை. உழ்ஹிய்யா பற்றிய மகாஸிதியப் பார்வை. Reviewed by Madawala News on 9/02/2016 11:46:00 PM Rating: 5