Ad Space avaiable

மெல்சிரிபுர விபத்தில் ஒருவர் பலி.



-ஜே.எம்.ஹபீஸ் -

கொக்கரெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெல்சிரிபுர பிரதேசத்தில் (20.9.2106 மாலை) இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மடஹபொல பிரதேசத்தில் இருந்து மெல்சிரிபுர பிரதேசத்திற்கு சென்றுகொண்டிருந்த  டிப்பர் வண்டி ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கில் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிலை செலுத்தியவர் இவ் விபத்தில் கடும் காயங்களுக்குள்ளாகி  கொகரெல்ல வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அங்கு சிகிட்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மடஹபொல, ஹாபத்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஆர்.எம். தனஞ்ஜய திலக் ரத்நாயக்க என்பவராவார். சடலம் மேலதிக விசாரணகளுக்காக கொகரெல்ல வைத்திய சாலையில் வைக்கப்பட்டிருந்தது. கொகரெல்ல பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



மெல்சிரிபுர விபத்தில் ஒருவர் பலி. மெல்சிரிபுர விபத்தில் ஒருவர் பலி. Reviewed by Madawala News on 9/22/2016 10:43:00 AM Rating: 5