நீதிமன்றம் சென்றவரை மறித்து கை, காலை வெட்டினர்.



மொரட்டுவை - ராவதாவத்தை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நால்வர் அடங்கிய குழுவினர் கூரிய ஆயுதத்தால் மேற்கொண்ட இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவரின் கை மற்றும் கால்களை வெட்டியுள்ளதகவும்  இப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நீதிமன்றம் சென்றவரை மறித்து கை, காலை வெட்டினர். நீதிமன்றம் சென்றவரை மறித்து கை, காலை  வெட்டினர். Reviewed by Madawala News on 9/20/2016 04:14:00 PM Rating: 5