பல்கேரியாவிலும் முகத்தை மூடி நிகாப் மற்றும் புர்கா அணிய தடை

பொது இடங்களில் முகத்தை மூடி கொள்ளும் துணிகள் அணிவதை பல்கேரிய நாடாளுமன்றம் தடை செய்திருக்கிறது. 


வலது சாரி கூட்டணி கட்சியான நாட்டுப்பற்றாளர் முன்னணி கடந்த ஜூன் மாதம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. 

கண்களை மட்டுமே வெளிகாட்டும் நிகாப், அல்லது முகம் முழுவதையும் மூடிவிடும் புர்கா போன்ற முகத்தை மூடிக் கொள்ளும் இஸ்லாமியரின் ஆடைகளை தடை செய்வதாக இந்த சட்டம் குறிப்பிடுகிறது.

ஏழு மில்லியன் மக்கள்தொகை கொண்ட பல்கேரியாவில், கிட்டதட்ட 10 சதவீதமே உள்ள முஸ்லீம்களால் இது பாரம்பரிய ஆடையாக கருதப்படவில்லை. 

நாட்டின் தெற்கு பகுதி நகரான பஸார்ட்ஜிக்கில், ரோமா சமூகத்தின் சிறிய முஸ்லீம் குழு ஒன்றின் ஏறக்குறைய இரண்டு டஜன் பெண்களால் மட்டுமே நிகாப் அணியப்படுகிறது. 

பிரான்ஸூம், பெல்ஜியமும் முகத்தை மூடி கொள்ளும் ஆடைகளை ஏற்கெனவே தடை செய்திருக்கின்றன.

-BBC -


பல்கேரியாவிலும் முகத்தை மூடி நிகாப் மற்றும் புர்கா அணிய தடை பல்கேரியாவிலும் முகத்தை மூடி  நிகாப் மற்றும் புர்கா அணிய தடை Reviewed by Madawala News on 9/30/2016 08:02:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.