Free Space

வடக்கோடு இணைய கிழக்கு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு - சம்பந்தன் ஏற்றுக்கொண்டார்.


இன்று நல்லாட்சி அரசாங்கம் வந்ததன் பின், புறையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கானுவதாக கூறி பல கட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருவதை நாம் காணுகின்றோம்.

இந்த தருணத்தில் தமிழ் தரப்பின் கோரிக்கையாக வடகிழக்கு இணைந்த மாகாணத்தில், சமஸ்டி அலகு வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு, அதற்குறிய முன்னெடுப்புகளும் நடந்து கொண்டுவருவதையும்  நாம் அறிவோம்.

இந்த தீர்வு திட்டங்கள் வெற்றியடையுமா?, அல்லது அதுவும் காணல் நீராகத்தான் ஆகிவிடுமா என்பதெல்லாம் ஒரு விவாதத்துக்குறிய விடயமாக இருந்தாலும், 

முஸ்லிம்களாகிய நாம் சம்பந்தபட்ட, 
வடகிழக்கு இணைப்பு விடயம் என்ன நிலையில் உள்ளது என்பதும், அதனால் எமது சமூகத்துக்கு என்ன லாபம்,நஸ்டம் ஏற்படும் என்ற விடயமும் விவாதிக்கப்படும் காலமாக இது இருக்கின்றது.

இந்த நிலையில் வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக, வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பல முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் வடகிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்கவேண்டும் என்று கூறுவது மட்டுமல்ல, பல மேடைகள் போட்டு அது சம்பந்தமாக பேசியும்,கதைத்தும் வருவதையும்  நாம் கண்டுவருகின்றோம்.

இந்த நேரத்தில் கிழக்கு முஸ்லிம்களின் பெரும்பாண்மை ஆதரவை பெற்ற ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் அது சம்பந்தமாக இன்றுவரை எந்தவித கருத்தையும் தெறிவிக்கவில்லை,  ஆனால் அதன் தலைவர், ஹக்கீம் அவர்கள் "சேதாரம்" இல்லாத ஒரு தீர்வை பெற நாங்கள்  முயற்சிக்கின்றோம் என்று கூறிவருகின்றார்.

அதே நேரம் அந்த கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர்,
மறைந்த தலைவர் அஸ்ரப்பின் என்னப்படி தீர்வு கிடைக்கவேண்டும் என்று பேசிவருகின்றார்கள்.

அதாவது முஸ்லிம் மாகாணசபை ஒன்றை தந்தால், வடக்கோடு கிழக்கை இணைப்பதாக கூறிவருகின்றனர்.அத்தோடு இதுதான் மறைந்த தலைவர் அஸ்ரப்பின் என்னம் என்றும் கூறுகின்றனர்.

அதே நேரம் அஸ்ரப் அவர்கள், இதைத்தான் தீர்வாக கேட்டார் என்று, இவர்கள் கூறும் தீர்வுக்கும், அஸ்ரப் அவர்கள் மரணிப்பதற்க்கு முன் 2000ம் ஆண்டு சந்திரிக்காவின் தீர்வு பொதியில் அவர் வைத்த தீர்வுக்கும், சம்பந்தமே இல்லை என்பது அந்த தீர்வு பொதியை அறிந்தவர்களுக்கு தெறியும் என்று நினைக்கின்றேன்.

அது மட்டுமல்ல தற்போது தமிழர்களின் தலைவரான சம்பந்தன் ஐயா அவர்கள்,
வடகிழக்கு சம்பந்தமாக  நானும் அஸ்ரப் அவர்களும்,2000ம் ஆண்டு அரசியல் சீர்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட இருந்த நேரத்தில், ஒரு இரவு இரண்டு மணி வரை வடகிழக்கு சம்பந்தமாக  நாங்கள் இருவரும் பேசி இணைங்கிக்கொண்ட விடயமே அந்த அரசியல் தீர்வில் அஸ்ரப் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.என்று அண்மையில் பாலமுனையில் நடந்த  மு.காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டில் அறிவித்திருந்தார்.

அது மட்டுமல்ல கடந்த 16ம் திகதி கொழும்பிலே நடந்த, மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்ச்சியிலும், சம்பந்தன் ஐயா அவர்கள் 2000ம் ஆண்டு அஸ்ரப்பும், நானும் இணைங்கி கொண்ட விடயமே, அன்று அஸ்ரப் அவர்களினால் அந்த தீர்வுபொதியில்  தீர்வாக முன்வைக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

அப்படியானால் அந்த தீர்வு என்ன என்பதை நாம் ஆராய்ந்தால், வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக அந்த தீர்வு பொதியிலே என்ன விடயம்  கூறப்பட்டிருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அந்த தீர்வு பொதியில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வடக்கு மாகாணத்துடன் இணைந்திருக்க விரும்புகின்றார்களா?  இல்லையா என்பது தொடர்பாக மூன்று மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும்.

அரசியல் யாப்பு தொடங்கிய காலப்பகுதியிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தாமலும்,பத்து ஆண்டுகள் மூன்று மாதத்துக்கு பிந்தாமலும் இச் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படுதல் வேண்டும்.

மேற்கூறிய காலப்பகுதி முடிவடையும் திகதி வரை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாவிடில் அத்திகதியிலிருந்து        வடக்கு-கிழக்கு ஒரு பிராந்தியமாக கருதப்படாது. இரு பிராந்தியங்களாகவே கருதப்படும்.


என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது 
ஆகவே,அந்த இரண்டு தலைவர்களும் இணைங்கிக் கொண்ட தீர்மானம் என்ன சொல்கிறது என்று பார்த்தால்,வடக்கோடு கிழக்கு இணைவதாக இருந்தால் கிழக்கு மக்களிடம் சர்வஜண வாக்கெடுப்பு நடத்தபட வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.

அப்படி தேர்தல் நடத்தினால் கிழக்கிலே இருக்கும் மூவின மக்களும் பிரிந்து இருக்கவே வாக்களிப்பார்கள் என்பது அஸ்ரப் அவர்களுக்கும் தெறியும்,
சம்பந்தன் ஐயாவுக்கும் தெறியும்.

ஆக, அஸ்ரப் அவர்கள் அந்த தீர்வு பொதியிலே கிழக்கு மக்களிடம் அபிப்பிராயம் கேட்கபட வேண்டும் என்றுதான் கூறியுள்ளாரே தவிர,
நிபந்தனையின் அடிப்படையில் கிழக்கை வடக்கோடு இணைக்க அவர் சம்மதம் தெறிவிக்கவில்லை,
என்ற விடயம் தெளிவாக நமக்கு தெரியவரும்.அதே போன்றுதான் இப்போதும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி கிழக்கு மக்களின் உரிமையை பேனவேண்டும்.

அப்படி கிழக்கு மக்களின் அபிப்பிராயம் கேக்கப்படாமல், நாங்கள்தான் முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும், தலைவர்கள் சேர்ந்து கொண்டு இணைக்க  முற்பட்டால்,
அது ஒரு பாரிய துரோகமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

எனவே சம்பந்தன் ஐயா அவர்களும், தலைவர் அஸ்ரப் அவர்களும் இந்த விடத்தை கிழக்குவாழ் வாக்காள பெருமக்களே தீர்மானிக்க வேண்டும் என்று 2000ம் ஆண்டு ஒத்துக்கொண்டது போல். 
இப்போது நடக்க, இப்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும், தமிழ் தலைமைகளும் முயற்ச்சிக்கவேண்டும்.
என்பதே எங்கள் அவா!

ஆக்கம்
எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை.

வடக்கோடு இணைய கிழக்கு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு - சம்பந்தன் ஏற்றுக்கொண்டார். வடக்கோடு இணைய கிழக்கு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு - சம்பந்தன் ஏற்றுக்கொண்டார். Reviewed by Madawala News on 9/18/2016 03:54:00 PM Rating: 5