Kidny

Kidny

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையானது உறுதிப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் ..


இந்த நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சி­களில் ஒன்­றான ஐக்­கிய தேசியக் கட்சி தன்­னு­டைய 70ஆவது வரு­டத்தை பூர்த்­திசெய்­கின்ற இத்­த­ரு­ணத்தில் அக்­கட்­சியின் தலைவர் மற்றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் என்ற முறையில், வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­வ­தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தெரி­வித்தார்.


ஐக்­கிய தேசியக் கட்­சியின் 70ஆவது வருடப் பூர்த்­தியை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,


இக் கட்சி தேச­பிதா டீ.எஸ்.சேன­ாநா­யக்க

வின் கருத்­து­ரு­வா­க்கத்தில் இருந்து இன்­று­வரை இந்­நாட்டின் அர­சி­ய­லிலே பாரிய புரட்­சி­க­ர­மான மாற்­றங்­க­ளுக்கு வழி­கோ­லிய ஒரு கட்சி என்­பது பர­வ­லாக எல்­லோரும் ஏற்­றுக்­கொள்­கின்ற விட­ய­மாகும்.


அவ்­வப்­போது பல­வி­த­மான சர்ச்­சைக்­கு­ரிய அர­சியல் பிரச்­சி­னைகள் உரு­வெ­டுத்­தாலும், ஜன­நா­யக ரீதி­யாக இந்த நாட்டில் மாற்று அர­சாங்­கங்­களின் வழி­காட்­டி­யாக இந்த கட்சி உரு­வெ­டுத்­த­போதும்,தனிக்­கட்­சி­யாக ஆட்­சி­ய­மைத்துக் கொண்­டி­ருந்த கட்சி காலப்­போக்கில் கூட்டு அர­சாங்­கங்­களின் ஊடாக ஆட்­சியை கைப்­பற்றும் நிலைமை ஏற்­பட்டு, இப்­பொ­ழுது இந்த நாட்டின் தேசிய அர­சாங்­கத்தின் அங்­க­மாக உரு­வெ­டுத்­தி­ருக்­கின்­றது.


இக்­கட்­சி­யுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பல இடங்­க­ளிலே கூட்டுச் சேர்ந்து தேர்­தல்­க­ளிலே போட்­டி­யிட்­டி­ருக்­கின்­றது. எங்­க­ளுக்­கி­டை­யில் பல புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்­றி­னூ­டாக நாங்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற இந்த நாட்டின் மிக முக்­கி­ய­மான ஓரி­னத்­த­வ­ராக இருக்­கின்ற முஸ்­லிம்­க­ளு­டைய அர­சியல் அபி­லா­ஷை­க­ளுக்கு உரிய தீர்­வு­களை காண்­கின்ற முயற்­சி­களில் நாங்கள் ஐ.தே. கட்­சி­யோடு கைகோர்த்துப் பய­ணித்­தி­ருக்­கின்றோம்.

பல­வி­த­மான சிக்­கல்கள் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்த விட­யத்தில், இந்­திய–இலங்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட பின்­ன­ணியில் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தான ஒரு மனப்­ப­தி­வையும் அத­னூ­டாக பல­வி­த­மான அர­சியல் ரீதி­யான பின்­ன­டை­வு­க­ளையும் நாங்கள் சந்­தித்த போதி­லும்­கூட, அந்த 13ஆவது சட்டத் திருத்­தத்தில் மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யோடு புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தி புதி­ய­தொரு அர­சியல் யாப்பை உரு­வாக்கி, அத­னூ­டாக இந்த நாட்டின் ஜன­நா­ய­கத்­திலும் கூட விகி­தா­சார தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்தி ஐக்­கிய தேசியக் கட்சி அரசு கால­போக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தூண்­டு­த­லி­னால்­ஏற்­க­னவே இருந்த 12வீத வெட்­டுப்­புள்­ளியை விகி­தா­சார முறை­யிலும் அந்த 5வீத வெட்டுப் புள்­ளியாகக் குறைப்­ப­தற்கு உடன்­பட்ட கார­ணத்­தினால் இந்த நாட்டின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் பர­வ­லாக்­கப்­பட்­டது. 


ஆனால் அதனை இன்று இன்­னு­மொரு திக்­குக்கு கொண்டு செல்­கின்ற முயற்சி நடந்து கொண்­டி­ருக்­கின்­றது, அதிலும் சிறு­பான்மை இனங்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் ஒரு தேர்தல் முறைமை உரு­வாக வேண்டும் என்­ப­தற்­கான பர­வ­லான பரந்து விரிந்த மாற்றுக் கருத்­துக்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களில் நாங்கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ளோம்.

இந்த நாட்டில் ஜன­நா­யகம் நிலைக்­கவும், அதே­நேரம் சகல இனங்­க­ளுக்கும் நீதி­யான, நியா­ய­மான எதிர்­காலம் அமைய வேண்­டு­மான போராட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி நேர்­மை­யான நியா­ய­மான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனுடைய தலைமையின் மீது இருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் கைகோர்த்து பயணிக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அந்த தலைமை தன்னுடைய உறுதிப்பாடுகளை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம். 


இந்தக்கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம் என்றார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையானது உறுதிப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் .. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையானது உறுதிப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் .. Reviewed by Madawala News on 9/10/2016 12:00:00 PM Rating: 5