தெஹிவளை பிரதேச பள்ளிவாயல்களின் தேவைகளை அறிந்துகொள்ள எஸ்.எம். மரிக்கார் களவிஜயம் ..

ப்

-எம் சாஜஹான்-
கொழும்பு தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாயல்களுக்கு விஜயம் செய்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் பள்ளிவாயல்களின் உள்ள குறைபாடுகளை கேட்டரிந்ததுடன்  அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொடுத்தார்.


இதற்கமைவாக கொழும்பில் உள்ள மூன்று பள்ளிவாயல்களுக்கு கட்டடப் பொருற்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

கொழும்பு காலிவீதி தெஹிவளை மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு தேவையான 1 லட்சம் ரூபா பொருமதியான டைல்களும் தெஹிவளை கலுபோவில பள்ளிவாயலுக்கு இரண்டரை லட்சம் பொருமதியான கட்டுமான மூலப்பொருட்களும் தெஹிவளை வித்யா மாவத்தை பள்ளிவாயலுக்கு 1 லட்சம் பொருமதியான கட்டுமான பொருட்களும் இன்று கையளிக்கப்பட்டன.

அங்கு பள்ளி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர் பள்ளிவாயலின் தேவைகளையும் கேட்டரிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் அவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். 





 
தெஹிவளை பிரதேச பள்ளிவாயல்களின் தேவைகளை அறிந்துகொள்ள எஸ்.எம். மரிக்கார் களவிஜயம் .. தெஹிவளை பிரதேச பள்ளிவாயல்களின் தேவைகளை அறிந்துகொள்ள எஸ்.எம். மரிக்கார் களவிஜயம் .. Reviewed by Madawala News on 9/30/2016 10:48:00 PM Rating: 5