Free Space

கல்ஹின்னை மோதல் விவகார அப்டேட் ...


நேற்று கல்ஹின்னை பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஒரு சமூகப்பிரச்சினையாக மாறாமல் தடுக்குமாறு  பொலிஸ் மா அதிபரிடத்தில் வழியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அங்கும்புர பிரதேசத வாலிபர்கள் சிலர் கல்ஹின்னை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசத்தில் தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்ட பின்னணியில் முஸ்லீம் வாலிபர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் லாபிர் ஹாஜி மற்றும் ஹிதாயத் சத்தார் ஆகியோர் கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் இடத்தில் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து உடன் ஸ்தலத்துக்கு விரைந்த அங்கும்புர பொலிஸாருக்கு உதவியாக கடுகஸ்தோட்டை அலவாதுகொடை கலகெதர உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸார் கல்ஹின்னைக்கு வந்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ் எம் மரிக்கார் ஆகியோர் நேற்று கல்ஹின்னை பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஒரு சமூகப்பிரச்சினையாக மாறாமல் தடுக்குமாறு  பொலிஸ் மா அதிபரிடத்தில் வழியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது மாகாண சபை உறுப்பினர்கள் லாபிர் ஹாஜியார் மற்றும் ஹிதாயத் சத்தார் ஆகியோர் தொடர்ச்சியாக பிரதி பொலிஸ்மா அதிபருடன் கதைத்துவருவதாகவும் கல்ஹின்னை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மடவளை நியுசுக்கு குறிப்பிட்ட அவர்கள்

கல்ஹின்னை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட செயற்பாடுகள் வழமைபோல இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டனர்.

இன்று இரவு வேளையில் கல்ஹின்னை பிரதேசத்துக்கு விஷேட பாதுகாப்பு எற்பாடுகள் செய்ய பொலிஸ் மா அதிபரின் நேரடி பனிப்புரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்ஹின்னை மோதல் விவகார அப்டேட் ... கல்ஹின்னை மோதல் விவகார அப்டேட் ... Reviewed by Madawala News on 9/15/2016 02:31:00 PM Rating: 5