இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு ! .ஹிஸ்புல் சலாவுதின் எச்சரிக்கை...


அபூஸாலி   முஹம்மத் சுல்பிகார்  
ஜம்மு காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு செல்லும் நிலையில், இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு... எண்ணற்ற தற்கொலைப் படை  ஊடுருவச் செய்திருக்கிறோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க  சலாவுதீன் மிரட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த புர்ஹான் வானி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 மாதம் ஆகியும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை.

தற்போது ஜம்மு காஷ்மீருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சி குழு ஒன்று செல்கிறது. இக்குழுவுக்கு ஹுரியத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் காஷ்மீரில் அமைதியான முறையில் தீர்வு காண நினைக்கும் மத்திய அரசின் முயற்சிகளை தடுக்க தற்கொலைப்படை  அங்கு அனுப்புவோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சயத் சலாவுதின் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமைத் தீர்வை நாடும் முயற்சியை குலைக்க தற்கொலைப்படை காஷ்மீருக்கு அனுப்புவோம். இந்திய ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி அப்பகுதியை சுடுகாடாக மாற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு ! .ஹிஸ்புல் சலாவுதின் எச்சரிக்கை... இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு ! .ஹிஸ்புல்  சலாவுதின் எச்சரிக்கை... Reviewed by Madawala News on 9/04/2016 04:31:00 PM Rating: 5