பழைய பைல்கள் அனைத்தையும் ஊழல் மோசடி பிரிவு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு !

கடந்த 2000 ஆண்டு முதல் 2015 வரை மேற்கொள்ளப்பட்டுள்ள 81 முறைப்படுகளை லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பிரிவு கிடப்பில் போட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குற்றம்சுமத்தினார்.

நேற்று இரவு இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்...

கடந்த 2000 ஆண்டு முதல் 2015 வரை மேற்கொள்ளப்பட்டுள்ள 81 முறைப்படுகளை லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பிரிவு கிடப்பில் போட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் ஜனாதிபதி மைத்ரி,பிரதமர் ரனில், அமைச்சர்கள் கபீர் ஹஷீம், சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலருக்கு எதிராக முறைப்பாடுகள் உள்ளன.இந்த விடயம் தொடர்பில் சபையில் நான் ஆவணப்படுத்தியுள்ளேன்.

தற்போது லஞ்ச மற்றும் ஊழல் மோசடி பிரிவின் தலைவர் பதவி டில்ருக்‌ஷி டயசுக்கு வழங்கப்பட்டுள்ளது.அவர் பிரதமரின் நெருங்கிய குடும்பதோழி. அவர் இந்த விசாரனைகளை கிடப்பில் போட்டுள்ளார்.

ஜனநாயகம் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றே ஆட்சியை மாற்றினார்கள் தற்போது இந்த முறைப்படுகளை ஏன் விசாரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பழைய பைல்கள் அனைத்தையும் ஊழல் மோசடி பிரிவு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு ! பழைய பைல்கள் அனைத்தையும் ஊழல் மோசடி பிரிவு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு ! Reviewed by Madawala News on 9/23/2016 07:46:00 AM Rating: 5