மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் மலேசியாவிலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்...


மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார்  மீது இன்று மலேசியாவில் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இன்று மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய அமைச்சர் தயா கமகே மற்றும் கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குனவர்தன ஆகியோருடன் விமான நிலையம் சென்று திரும்பும் போது மலேசியா உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கார் ஒன்றில் வந்த கும்பல் அவரை முகம் தலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சரமாரியாக தாக்கிவிட்டு உயர்ஸ்தானிகர் அன்சார் அவர்களின் கைப்பேசியையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

தற்போது சிகிற்சையை முடித்துகொண்டு வீடு சென்றுள்ள உயர் ஸ்தானிகரிடம் மலேசிய பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திகொண்டுள்ளதாக அங்கிருந்து கிடத்த தகவல்கள் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தின.

இலங்கை வெளிநாட்டு சேவையில் சிரேஷ்ட உறுப்பினரான இப்ராஹிம் அன்சார் முன்னதாக சவுதி அரேபியா எகிப்து உள்ளிட்ட பல நாடுகளின் உயர்ஸ்தானிகராக இருந்த அதேவேளை அரசியல் நியமனம் மூலம் உயர்பதவிக்கு வந்த ஒருவர் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் மலேசியாவிலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்... மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் மலேசியாவிலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்... Reviewed by Madawala News on 9/04/2016 07:52:00 PM Rating: 5