Free Space

நல்லாட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்...! நாம் கடும் அதிருப்தியில் உள்ளோம்...


கடும் அர்பணிப்புகளுக்கு மத்தியில் இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட நல்லாட்சியினால் மக்களுக்கு எதுவித நண்மைகளும் இல்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிட்டார்.

இன்று காலை தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்...

கடும் அர்பணிப்புகளுக்கு மத்தியில் இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட நல்லாட்சியினால் மக்களுக்கு எதுவித நண்மைகளும் இல்லை மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பம் உட்கார்ந்த இடத்தில் இருந்து திருடினார்கள் ஆனால் நல்லாட்சி   அமைச்சர்கள் ஓடி ஓடி திருடுகிறார்கள்.

அப்போது பெசில் ராஜபக்‌ஷ கமிஷன் பெற்றுக்கொண்ட அதே பாணியில் இப்போது மலிக் சமரவிக்ரம கமிஷன் பெருகிறார். அப்போது பெசிலுக்கு 40 வீதம் கொடுத்தால் வேலை நடக்கும் இப்போது மலிக் சமரவிக்ரமவுக்கு 40 கொடுத்து எஞ்சியவர்களுக்கும் கமிஷன்கொடுக்க வேண்டியுள்ளது.முதலீட்டார்கள் மொத்தமாக 60 வீதம் கமிஷன் கொடுக்கவேண்டியுள்ளது.அதனால் முதலீட்டார்கள் நாட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள்.

நாம் மக்கள் முன்னிலையில் செல்லமுடியாது உள்ளது. தற்போது மக்களுக்கு கருத்து சுதந்திரம் கிடைத்துள்ளபோது ஊழல் குறையவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேசியபட்டியல் வழங்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். தற்போது இருபக்கமும் ஊழல்வாதிகள் உள்ளனர் அதனால் ஜனாதிபதிக்கு பிரதமரிடமோ பிரதமருக்கு ஜனாதிபதிக்கு பிரதமரிடமோ கேள்வி கேட்கமுடியாத நிலை தோன்றியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அரசாங்கம் பிற்போட்டு வருவதால் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் சீர்குழைந்துள்ளது. கொழும்பு நகரெங்கும்  குப்பைகள் நிரம்பி வழிகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாற்போது 22 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய அளவில் வாகன பேர்மிட் வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் அதனை பெற்றுக்கொண்டு கொழும்பில் வீடு ஒன்றை கொள்வனவு செய்து அதை வாடகைக்கு விட்டுவிட்டு இருக்கிறார்கள்.அவர்கள் யாருமெ தங்கள் ஊர்களுக்கு செல்வதில்லை அங்குள்ள மக்கள் நலன்களை பற்றி கேட்பதில்லை என குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கேட்டது போல உங்களுக்கு இப்போது மகிழ்ச்சியா என்றே கேட்கவேண்டியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நல்லாட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்...! நாம் கடும் அதிருப்தியில் உள்ளோம்... நல்லாட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்...! நாம் கடும் அதிருப்தியில் உள்ளோம்... Reviewed by Madawala News on 9/21/2016 06:16:00 PM Rating: 5