Free Space

முன்வைக்கப்பட்டுள்ள சமூகம் சார்ந்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவோம்:முபாறக் மவ்லவி..


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கட்சியுடன் முஸ்லிம் உலமா கட்சி உள்ளிட்ட ஏழு கட்சிகள் ஆதரவு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சிங்காள நாழிதல் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஸ்லீம் உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் 

கடந்த வெள்ளியன்று தங்களுக்கு பெசில் ராஜபக்‌ஷ தரப்புடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் இதில் முக்கியமாக வடகிழக்கு இணைப்பு தொடர்பில் தங்கள் நிலைப்பாடு உள்ளிட பல கோரிக்கைகள் அடங்கிய விடயங்களை 
தாங்கள் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் ஜனாதிபதி மைத்ரியுடனும் தாங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை தொடர்வதாக குறிப்பிட்டார்.

சமூகம் சார்ந்த தங்கள் கோரிக்கைகளை அங்கீரிக்கும் கட்சிக்கு தாங்கள் ஆதரவளிக்க தயார் எனவும் இது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்டுள்ள சமூகம் சார்ந்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவோம்:முபாறக் மவ்லவி.. முன்வைக்கப்பட்டுள்ள சமூகம் சார்ந்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவோம்:முபாறக் மவ்லவி.. Reviewed by Madawala News on 9/14/2016 08:11:00 AM Rating: 5