சுபநேரத்தில் அறிவிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது...



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் சுப நேரத்தில் அறிவிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது என தேசிய சுதந்திர முன்னனியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸ்மம்மில் குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாவதை எவராலும் தடுக்க முடியாது.குறித்த கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பான சகல விடயங்களும் நிறைவடைந்துள்ளப  சுப நேரத்தில் அதனை அறிவிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது.

நாம் அடுத்து இடம்பெறும் தேர்தல்களில் வெற்றியீட்டுவோம் அதனூடாக நல்லாட்சி அரசுக்கு பாரிய சவால்களை கொடுத்து பிரிவினைவாத அரசை வீட்டுக்கு அனுப்பி முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஆட்சியை கைப்பற்றுவோம்.
சுபநேரத்தில் அறிவிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது... சுபநேரத்தில் அறிவிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது... Reviewed by Madawala News on 9/20/2016 10:39:00 PM Rating: 5