Free Space

குர்பானுக்கு கடுமையான சட்டத்தை அமுல்படுத்துக !


-ARA FAREEL -
முஸ்­லிம்­களின் குர்பான் கட­மைக்­காக மாடுகள் அறுப்­ப­தற்கு அனு­மதி வழங்கும் போது நாட்டின் சட்­டத்தை கடு­மை­யாக அமுல்­ப­டுத்தி இனங்­க­ளுக்­க­கி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வதை தவிர்க்கும் படி சிங்­கள ராவய அமைப்பு உள்ளூராட்சி ஆணை­யா­ளர்­க­ளி­டமும் பிர­தேச செய­லா­ளர்­க­ளி­டமும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

அனைத்து மாந­ர­சபை ,நக­ர­சபை ஆணை­யா­ளர்­க­ளி­டமும் பிர­தே­ச­ச­பை­களின் செய­லா­ளர்­க­ளி­டமும் இவ்­வா­றான கோரிக்­கை­யொன்­றினை முன்­வைத்­துள்­ள­தாக சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

குர்பான் மாடுகள் அறுப்­பது தொடர்பில் சிங்­கள ராவ­யின தலைவர் கருத்து தெரி­விக்­கையில், குர்பானுக்­கான மாடுகள் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்ள மாடுகள் அறுக்கும் மடு­வங்­க­ளிலேயே  அறுக்­கப்­ப­ட­வேண்டும்.

மேல் மாகா­ணத்தில் ராக­மையில் உள்ள மாடுகள் அறுக்கும் மடு­வத்தை மாத்­தி­ரமே பயன்­ப­டுத்த முடியும். முஸ்­லிம்கள் அவர்­க­ளது குர்பான் கடமைக் காலத்தில் தாம் நினைத்த இடங்­க­ளி­லெல்லாம் வீடு­க­ளிலும் மற்றும் பொது இடங்­க­ளிலும் மாடுகள் அறுப்­ப­தற்கு உள்­ளூ­ராட்சி அதி­கா­ரிகள் அனு­மதி வழங்­கக்­கூ­டாது.

அவ்­வாறு அனு­மதி வழங்­கப்­பட்டு அதன் கார­ண­மாக இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை ஏற்­பட்டால் அதற்கு மாந­க­ர­சபை மற்றும் நக­ர­சபை ஆணை­யா­ளர்­களும் பிர­தேச செய­லா­ளர்­க­ளுமே பொறுப்புக் கூற­வேண்டும்.

முஸ்­லிம்கள் ஏனைய இன மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து நாட்டின் சட்­டத்­திற்கு அமைய தமது சமயக் கட­மையை நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்டும். இந்­துக்கள் மாடு­களை தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள்.பௌத்­தர்­களும் மிருக வதையை எதிர்ப்­ப­துடன் மாடுகள் அறுப்­பதைத் தடை செய்­ய­வேண்டும் என்­கி­றார்கள்.

எனவே சம்­பந்­தப்­பட்ட அரச அதி­கா­ரிகள் மாடுகள் அறுக்கும் விட­யத்தில் சட்­டத்தைக் கடுமையாக அமுல்படுத்தி இதன் மூலம் நாட்டில் இன முறுகல் ஏற்படாதவாறு ஆவன செய்ய வேண்டும்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கும் சிங்கள ராவய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.
குர்பானுக்கு கடுமையான சட்டத்தை அமுல்படுத்துக ! குர்பானுக்கு கடுமையான சட்டத்தை அமுல்படுத்துக ! Reviewed by Madawala News on 9/07/2016 12:52:00 PM Rating: 5