Kidny

Kidny

சமூகப் பொறுப்பை சிவில் சமூகங்கள் சுமக்குமா?எம்.எம்.ஏ.ஸமட்
தெற்காசியாவில் பல சரித்திர வரலாறுகளைக்கொண்ட இலங்கை 1505 ஆண்டு முதல் மேற்குலகின் ஆட்சிக்கு உட்பட்டது. ஏறக்குறைய 443 வருடங்கள் இத்திருநாடு; ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சியிலிருந்தது. அவ்வாறு ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சியிலிருந்த நம்நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அடிமை விலங்கு உடைத்தெறியப்பட்டு மாற்றத்திற்கான பயணம் சுதந்திர விடுதலையுடன் தொடங்கியது.  பல்லின மக்களினதும்; சமூகத்  தலைவர்களினதும் தியாகங்களுடன் பெறப்பட்ட சுதந்திரம் என்ற மாற்றம் காலபோக்கில் இனங்களுக்கான அல்லது மதங்களுக்கான முன்னுரிமை என்ற இனத்துவப் போக்கின் காரணமாக மீண்டும் பழைய புள்ளிக்குத் திரும்பியது.
 
சுதந்திரத்தின் பின்னர்; இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இனக்குரோதச் செயற்பாடுகள், சுதந்திரத்தைப் பெற ஒன்றுமைப்பட்டிருந்த இலங்கை மக்களை  இனரீதியாகச் சிந்திக்கச் செய்தது. சிங்கள பெரும்பான்மை சமூகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளும,; கட்சித்தலைவர்களும் தங்களது அரசியல் இருப்பை இலக்காகக் கொண்டு சிங்கள மக்களையும். பௌத்த மதத்தையும் அக்கறையுடன் கவனிக்கத் தொடங்கினர். இதன்; விளைவு சிறுபான்மை சமூகத்தை இரண்;டாம் தரப் பிரஜைகளாக பார்க்கும் மனப்பாங்கை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.
 
இத்தோற்றப்படானது. நாளடவில் விஷ்வரூபமெடுத்து சிறுபான்மை மக்களை மாற்றான் மனப்பான்மையோடு நோக்கவும,; சுயநிர்ணைய உரிமைகளை மறுக்கவும் வழிகோலியது.  இன ரீதியாகச் சிந்தித்து இனத்தின் பெயரில் அரசியல் கட்சிகளை ஆரம்பித்து, அக்கட்சிகளின் சார்பில் மக்கள் வாக்குகளினூடாக அதிகார மன்றங்களுக்குச் சென்று அந்த மக்கள் மன்றில் தத்தமது இனத்திற்காக குரல் கொடுக்கவும் போராட்டங்களை மேற்கொள்ளவும் வழி செய்தன.
 
இவ்வரலாற்றுப் படிமங்களில் சிக்கித்தவித்த ஒரு சமூகமாக தமிழ் சமூகமும் அடுத்தபடியாக முஸ்லிம் சமூகமும் காணப்படுகிறது. இனவாதத் தீயிற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் விலைகொடுத்திருக்கிறது. ஒப்பிட்டளவில் தமிழ் சமூகம் அதிக விலைகொடுத்திருந்தாலும். முஸ்லிம் சமூகமும் இனவாதப் பசிக்கு தீனியாக்கப்பட்டிகியிருக்கிறது. இவ்வாறான காலங்களில் சமூகத்தைக் காப்பாற்றுவதற்காக சமூக மட்டங்களில் பல இயக்கங்கள் உருவாகின அவை மழைக்கு முளைக்கும் காளான்களாகவே காணப்பட்டதே தவிர, உறுதியான மரங்களாக அவை வளரவில்லை. அவற்றின் இலக்குகளும் நோக்கங்களும் என்னவென்று தெரியாமலேயே அவை மறைந்திருக்கின்றன. அதுமாத்திரமின்றி அவை விலைபோனவைகளாகவும் கூஜா தூக்கும் அமைப்புக்களாகவும் மாறியிருக்கின்றன.
 
அவ்வாறான நிலையின்தான் முஸ்லிம் சமூகத்தின் சமூக, அரசியல் தளங்களில் மாற்றத்திற்கான அவசியமும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது. இந்த உணர்தல் பலரிடம் ஏற்பட்டபோதும் அதற்கான ஆரோக்கியமான செயற்பாடுகள் அந்த நபர்களினால் முன்னெடுக்கப்படவில்லை. முஸ்லிம்களின் சுயநிர்ணைய உரிமையை மாத்திரமின்றி அனைத்தையும் பாதுகாக்க வேண்டுமாயின் நமக்கான தனித்துவமான அரசியல் இயக்கம் ஒன்று அவசியம். அந்த அவசிய இயக்கத்தை தோற்றுவித்து அவற்றை வளர்ப்பது யார்? மாற்றம் உருவாக வேண்டும் அதை உருவாக்குவது யார்?  பூனைக்கு மணி கட்டுவது அவசியம். யார் அந்த மணியைக் கட்டுவது போன்ற கேள்விகள் எழுந்தபோது அக்கேள்விகளுக்கு விடைகொடுத்து மாற்றத்தைக் கண்டவர்; மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் எனலாம்..
 
இருப்பினும் இந்த மாற்றம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தொடர்வதற்கு இனவாதம் இடம்கொடுக்க வில்லை. இக்கட்சிக்குள் பணத்திற்கும், பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் சோரம்போகக் கூடியவர்களை இனம்கண்ட பேரினவாதம் அவர்களைக் கொண்டு இக்கட்சியை சிதைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. அதன் தொடரில் தலைவர் அஷ்ரபும் அகால மரணத்தைத் தழுவிக்கொண்டார். அவரின் மரணத்தைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் ஸ்தீரமற்ற நிலைக்கு சென்று இன்றைய பிளவுகள்பட்ட நிலைக்குவந்துள்ளது..
 
முஸ்லிம் சமூகம் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு உரிய தளத்தில் பதிலளிக்க முடியாத தலைமைகளினதும், மக்கள் பிரதிநிதிகளினதும், சமூக அமைப்புக்களினதும் இயலாமை முஸ்லிம் சமூகத்தில் தலைமைகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதுடன் அத்தலைமைகளுக்கு சோரம் போகக் கூடிய அமைப்புக்கள் மீதும் அவநம்பிக்கையை சமகாலத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
 
இனவாதத்திற்கு எதிரான மக்கள் பலம்
அஷ்ரபின் அரசியல்  பலம் இந்நாட்டில் முஸ்லிம்களின் வளர்ச்சியை எல்லை கடக்கச் செய்துவிடும் என்று அஞ்சிய இனவாதம் பல்வேறு நெருக்குதல்களால் அவரைத் தொடர்ந்தது. சமூக நலன்சார்ந்த அவரது அத்தனை செயற்பாடுகளுக்கும் இனவாதச் சாயம் பூசப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளானது. தொடாச்சியான கருத்து வாதங்களை முன்னிருத்தியது. இருந்தும், அவர் அத்தனைக்கும் முகம்கொடுத்துச் செயற்பட்டார். இனவாதம் கொண்டோர்களினால் அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகத்தில்; பலரும் துணைபோன வரலாறுகளும் உண்டு.
 
இப்போதும் சமூக நலனின் அக்கறைகொண்டு செயற்படுகின்வர்களின் வளர்ச்சியைத் தடுப்பதை இலக்காகக் கொண்டு இனவாதம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை மக்கள் மயப்படுத்தும் செயல்களிலும் இனவாதக் கடும்போக்காளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். அவற்றின் தொடர்;ச்சியாகவே தெற்கில் வாழும் முஸ்லிம்களை நெருக்குவாரத்துக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை அங்காங்கே மேற்கொண்டுவருவதாகும்.
 
சர்வதேசத்திலும் இலங்கையிலும் முஸ்லிம்களின் சனத்தொகைப் பெருக்கமானது 'இஸ்லாமியப் போபியா'வை   இனவாதிகள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது. இதற்குச் சிறந்த உதாரணமாக எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால் ட்ரம்மின்; தேர்தல் பிராச்சாரங்கள் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
 
இலங்கையிலும் கடும்போக்காளர்களை உறுப்பினர்களாக் கொண்டு இயங்குகின்ற இயக்கங்கள் அவர்களது பேச்சுக்களில் அடிக்கடி முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்புப்பற்றி பேசுவதையும் காணக் கிடைக்கிறது. இவர்களின் இவ்வினவாத மக்கள் மயப்படுத்தப்பட்ட பிரச்சார யுக்கதிகளும் செயற்பாடுகளும் 'இஸ்லாமிய போபியா'வினால் இவர்கள் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்h எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. இச்சந்தேகத்தை வெறும் சந்தேகமாகக் கொள்வதைத் தவிர்த்து இவற்றை ராஜதந்திர ரீதியாகவும் சட்டத்தின் மூலமும் எதிர்கொள்வதற்கான ஒட்டுமொத்த பலமும் ஒற்றுமையுடன் பயன்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும்.
 
ஒற்றுமையின் அவசியம்
நாடளாவிய ரிதியில் 9.71 வீதம் வாழ்கின்ற முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் ஆண்மீக கொள்கைகளின் அடிப்படையிலும் பிரிந்து செயற்படுவது இந்நாட்டில் முஸ்லிம்களின் சகல விடயங்களையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது என்பதும் எதிர்காலத்தில் இந்நிலையை மோசமடையச் செய்யும்; என்பதும் இன்னும் இந்நாட்டில் பரந்து வாழும் முஸ்லிம்களால் உணரப்படாது உள்ளமை ஆரோக்கிமற்ற நிலையாகும்.
 
சமூக ஒற்றுமை என்பது ஒரு கடமை, ஒரு வணக்கம், சமூகத்தில் வாழுகின்ற ஒவ்வொருவரும் தனி நபர்களுக்கிடையே பரஸ்பர அறிமுகம், புரிந்தணர்வு, ஒப்பந்தம், ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும்
 
இந்த எதிர்பாhப்;வை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது. பூரமாண வாழ்க்கைத் திடடத்தை வழங்கியுள்ள இஸ்லாத்தை கௌரப்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரிச் சமூகமாக வாழ வேண்டிய முஸ்லிம் சமூகம், ஒற்றுமையென்ற கயிற்றைப் பலமாகப் பற்றிக்கொள்ளுங்கள் உங்களுக்குள் பிரிந்து விடாதீர்;கள் என நம்மை குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்தி வழிகாட்டியுள்ள நிலையில், இச்சமூகம் ஆன்மீகக் கொள்கைகள் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இன்னும் என்னென்ன விடயங்களிலெல்லாம் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் எவ்வாறெல்லாம் காட்டிக்கொடுக்க முடியுமோ அவ்வழிகளில் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
 
இந்நிலையையே இன்று அரபு உலகில் காணக் கூடியதாகவுள்ளது. அல்லாஹ்வையும் நபியையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கில் நாளாந்தம் கொள்ளப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்கள், பள்ளிவாசல்கள் குண்டு வைத்து தகர்க்கப்படுகின்றன என்றால் அவற்றின் பின்னணியில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கும் சக்திகள் முஸ்லிம்களை கொள்கை ரீதியாகவும் குல ரீதியாகவும் பிரித்து உங்களை நீங்களாகவே அழித்துக் கொள்ளுங்கள் என்று ஏவி விட்டிருக்கிறார்கள். அந்த நிலை  இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எற்பட்டுவிடக் கூ;டாது,
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு முகம்  பாதிப் பகுதி தமிழ் மக்களுக்கு சரியாகத் தெரிகின்ற வேளை மறுமுகம் அதே தமிழ் மக்களின் பாதிப் பகுதியினருக்கு பிழையாகத் தெரியத் தோன்றியிருக்கிறது. அதன் வெளிப்பாட்டையே தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் உருவாக்கியுள்ளதாக நடுநிலையாகச் சிந்திக்கும்; தமிழ் தரப்பிடமிருந்து கிடைக்கும் செய்தியாகவுள்ளது.
 
இவ்வாறான நிலையில்தான் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகளின் ஒரு முகச் சரியையும் மறுமுகப் பிழையையும் முஸ்லிம் சமூகம் கண்டுகொண்டிருக்கிறது. சமூகத்திற்குள் அல்லது சமூகத்திற்கு வெளியில் ஒரு பிரச்சினை எழுகின்றபோது அந்தப் பிரச்சினையானது எந்தப் பிராந்தியத்துக்குரியது? எந்த அரசியல் கட்சி தலைவர் சார்ந்ததது? இப்பிரச்சினைக்குள் நாம் தலையிட்டால் நமது அரசியல் இருப்பின் நிலையென்ன? என்ற கேள்விச் சிந்தனையோட்டங்கள் முஸ்லிம் அரசியலில் மலிந்து கிடைப்பதைக் காண முடிகிறது.
 
முஸ்லிம் அரசியலில் மாத்திரமின்றி சில சிவில் அமைப்புக்கள் மத்தியிலும் இச்சிந்தனை மேலோங்கியிருக்கிறது. இவை சமூகம் சார்ந்த சகல விடயங்களையும் கேள்விக்குறியாக்கி சமூகத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றிவிடும். இந்த சித்த விளையாட்டின் ஒரு பகுதியாகவே தற்போதைய அரசியலமைப்பின் மறுசீரமைப்பு தொடர்பாகவும், மறுசீரமைப்பினூடான சமூகத்திற்கான நன்மை தீமைகள் குறித்தும்; இதுவரை மக்களிடையே இத்தலைமைகளினால் விழிப்புணர்வு எற்படுத்தப்டவில்லை. இந்நிலையில் சமூகத்தின் நலன்களில் அக்கறை கொண்டு சமூகப்பொறுப்பைச் சுமக்க சமூகத்தின் சிவில் அமைப்புக்கள் இதயசுத்தியுடன் முன்வருது காலத்தின் அவசரத் தேவையாகும் எனச் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.
 
சிவில் அமைப்புக்களும் சமூகப் பொறுப்பும்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பில் முஸ்லிம் சமூகத்திற்குள்ள நன்மை தீமைகள், வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இனவாத நெருக்குதல்கள் உட்பட முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற அத்தனை பிரச்சினைகளும் பிராந்திய ரீதியான, கட்சி ரீதியான, ஆன்மீகக் கொள்கைகள் ரீதியான பிரச்சினைகளாக நோக்கப்படாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்நோக்கும் பிரச்சினையாக முஸ்லிம்கள் மத்தியில் நோக்கப்படுவது அவசியமாகும்.
 
இந்த அவசியத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் அரசியல், ஆன்மீகக் கொள்கைகள், பிராந்தியம் என்பவற்றைக் கடந்து ஒரே இறைவன், ஒரே நபி, ஓரே குர்ஆன், ஒரே கிப்லா என்ற நம்பிக்கையின் அடிப்படையில்  ; இதயசுத்தியோடு, செயற்படக் கூடிய, எவற்றிற்கும் சோரம்போகாத, சமூக நலனை அடைவதை மாத்திரம் இலக்காக்கொண்ட சிவில் அமைப்புக்கள் உருவாகுவது முக்கியமாகும்.
 
அந்தவகையில், சமூகத்தில், சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த மாற்றத்திற்காக கருத்து ஒருமைப்பாடுயுடையவர்கள் ஒன்றுபடுவதும் அவர்களை ஒன்றிணைப்பதும் அவசியமாகும். அதற்காக தங்களை மாற்றிக்கொண்டு அல்லது மாறியாவது பலமான சிவில் அமைப்பை உருhவக்க சமூக சிந்தனை கொண்டோர் முன்வர வேண்டுமென முன்னைய எமது பல கட்டுரைகள் முலம் அழைப்பு விடுக்கப்பட்டமையை இங்கு நினைவு படுத்துவது அவசியமாகும்.
 
பூணைக்கு மணி கட்டும் முயற்சிகள் காலத்திற்குக் காலம் முன்னெடுக்கப்பட்டு, அவ்வாறு மணி கட்டப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புக்களினூடாக ஒரு சில பணிகள் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கின்ற போதிலும் அதன் தலைவர்களாகவும் பதவி நிலை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் காலப்போக்கில் தமது இலக்குகளையும் நோக்கங்களையும் மறந்து பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் சோரம்போய் கட்டிய மணியைக் கழற்றி விடுகின்ற நிலையே முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காணப்படுகிறது.
 
இருப்பினும், கருத்து ஒருமைப்பாடுகொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்புக்கு அண்மையில் உயிர்வூட்டப்பட்டிருக்கிறது. சலுகைகளுக்கு சோரம்போகின்றவர்கள் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்புக்களிலிருந்து காலத்தின் அவசரத்திற்கேற்ப மக்களுக்கான பணியினை முன்னெடுக்க முடியாது என்று சிந்தித்த சிலர் மாற்றதிற்காக மாறி அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய முஸ்லிம் சமத்துவ சம்மேளனம் என்ற சிவில் அமைப்பொன்றை டாக்டர் வை.எல்.எம் யூசுப் தலைமையில் அண்மையில் உருவாக்கியிருக்கிறார்கள்
 
காலத்தின் அவசரம் அல்லது அவசியம் கருதி உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசிய முஸ்லிம் சமத்துவத்துவ சம்மேளனம் அதன் முதற்கட்டப் பணியாக தற்போது வரையப்பட்டு வருகின்ற இலங்கையின் மூன்றவாது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் அதன் மறுசீரமைப்பினால் முஸ்லிம் சமூகம் அடையப் போகும் நன்மை, தீமைகள் தொடர்பிலும்; மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகiளை அவசரமாக முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏனெனில், இந்நாட்டில் வாழும் சமூகங்களில் முஸ்லிம்களும் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட சமத்துவமிக்க சமூகம் என்ற வகையில் புதிய அரசியல் அமைப்பில் முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளும் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படுவது அவசியம். முஸ்லிம்களின் வாழ்வியலுக்கான தனித்துவச் சட்டங்கள் நீக்கப்படுவதோ அல்லது முஸ்லிம்களின் சுயநிர்ணைய உரிமைகள் பறிபோகும் வடிவில் இவ்வரசியல் வரைவு அமைந்துவிடுவதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில் இப்புதிய அரசியலைப்பு தொடர்பிலான முழுமையான அறிவை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் முழுமையான விழிப்புணர்வு நடவடிக்கையை  இவ்வமைப்பு முன்னெடுக்கவுள்ளமையும் இவ்வமைப்பு சமூக ரீதியிலான தார்மீகப் பொறுப்பைச் சுமைந்துள்ளதையும் புடம்போடுகிறது.
 
ஆனால், முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தி  பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்ட ரீதியில் உருவாக்கபட்ட சில சிவில் அமைப்புக்கள் சமூகப் பொறுப்புக்களை மறந்து தங்களது சுயநலன்களை வெற்றிகொள்வதற்காக  பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் சோரம்போவது அவர்கள் இன்னும் மாற்றமடையவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது
 
முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளாதா, அரசியல் கட்டமைப்புக்களில் மாற்றம் காணப்பட வேண்டுமாயின் அந்த மாற்றத்திற்காக மாற வேண்டியது சமூக சிந்தனையாளர்களைக் கொண்ட சிவில் அமைப்புக்களின் தார்மீகப் பொறுப்பாகும். அத்தகைய பொறுப்போடு சமூக மாற்றத்திற்காக மாறி ஒன்றிணைந்தவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய முஸ்லிம் சமத்துவ சம்மேளனத்தின் செயற்பாடுகள் அதன் இலக்கை தேசிய மட்டத்தில் அடைய வேண்டுமென்பது இக்கட்டுரையின் எதிர்பார்ப்பாகும்.
 
அரசியல் தலைமைகளிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு வேடிக்கைiயும் விமர்சனத்தையும் செய்யும் சமூகமாக முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பயணிக்காது, சிவில் அமைப்புக்கள் சமூகப் பொறுப்பை சுமக்க வேண்டும். அதற்காக சமூகத்தை விழிப்படையச் செய்ய வேண்டும். சமூகம் விழிப்படையும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்க முடிவதோடு சுயநிர்ணைய உரிமையையைப் பெற்று  சமத்துவத்தைத்துடன் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்;கொள்ள முடியும்.
 
சமூகப் பொறுப்பை சிவில் சமூகங்கள் சுமக்குமா? சமூகப் பொறுப்பை சிவில் சமூகங்கள் சுமக்குமா? Reviewed by Madawala News on 9/30/2016 01:24:00 AM Rating: 5