Accaddemy

கல்ஹின்னை பிரதேசத்துக்கி மேலதிக பொலிஸ் பாதுகாப்பு : பொலிஸ் மாஅதிபர் சற்றுமுன் உறுதியளித்தார்...


தற்போது கல்ஹின்னையில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை தொடர்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் சற்றுமுன் மீண்டுன் ஒருமுறை பொலிஸ் மா அதிபரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் பிரதேசத்தக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கல்ஹின்னை பிரதேசத்தில் உள்ள தக்கியா ஒன்றின் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தி விட்டு சிலர் தப்பியோடிய நிலையில் ஏற்கனவே இன்று காலை கல்ஹின்னை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்ற எஸ் எம் மரிக்கார் அவர்களின் கவனத்துக்கு மடவளை நியுஸ் தற்போதய நிலைமையை கொண்டு சென்றபோது ..

எம்மை தொடர்பில் வைத்துக்கொண்டு பொலிஸ் மா அதிபரை தொடர்ப்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் தற்போது கல்ஹின்னையில் ஏற்பட்டுள்ள பதட்டம் தொடர்பில் விளக்க்கியதுடன் அப்பிரதேத்துக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

தனது நேரடி தலையீட்டில் அப்பிரதேசத்துக்கு இன்னும் பொலிஸாரை அனுப்புவதாக உறுதியளித்த பொலிஸ்மா அதிபர் கல்ஹின்னை தொடர்பில் தான் விஷேட கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்...
கல்ஹின்னை பிரதேசத்துக்கி மேலதிக பொலிஸ் பாதுகாப்பு : பொலிஸ் மாஅதிபர் சற்றுமுன் உறுதியளித்தார்... கல்ஹின்னை பிரதேசத்துக்கி மேலதிக பொலிஸ் பாதுகாப்பு : பொலிஸ் மாஅதிபர் சற்றுமுன் உறுதியளித்தார்... Reviewed by Madawala News on 9/15/2016 11:01:00 PM Rating: 5