ஜனாதிபதியின் இணையத் தளத்திற்குள் ஊடுருவிய இருவருக்கும் விடுதலை



ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவிய சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

பாடசாலை மாணவன் மற்றும் மற்றைய சந்தேக நபர் இருவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27 வயது இளைஞன், 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும், மற்றைய மாணவன் 10 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இனிமேல் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று குறித்த மாணவனை எச்சரித்த நீதவான், அவர்களின் கடந்த ஆறு மாத கால இணையப் பயன்பாடு தொடர்பான பட்டியல் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஜனாதிபதியின் இணையத் தளத்திற்குள் ஊடுருவிய இருவருக்கும் விடுதலை ஜனாதிபதியின்  இணையத் தளத்திற்குள்  ஊடுருவிய  இருவருக்கும் விடுதலை Reviewed by Madawala News on 9/02/2016 11:13:00 AM Rating: 5