Friday, September 2, 2016

பதுளை ப/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் புதையல் ஆகிப்போன “ முப்பெருவிழா”

Published by Madawala News on Friday, September 2, 2016  | 


வாஹித் அப்துல் குத்தூஸ் பதுளை.

கடந்த வாரம் பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின்நடைபெற்ற முப்பெரு விழா நிகழ்வில் மாகாண முதல்வர் திரு சாமர சம்பத் திசாநாயக அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்கள்.

இந் நிகழ்வில் பாடசாலையின் குறுகிய கால வரலாற்றில் பாடசாலையின் சாதனைகள், மற்றும் மாணவிகளின் மிகச்சிறந்த பெறுபேறுகள் பற்றியும் அதே வேளை பாடசாலை ஆரம்பித்த நாள் தொட்டு இதுவரை காலமும் பாடசாலை சந்தித்த சவால்களையும் மாகாண கல்வித்திணைக்கள உயரதிகாரிகளால் ஏற்பட்டபுறக்கணிப்புக்கள், கவனயீனத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகள் பற்றி   விரிவானதொரு ஆவணத் தொகுப்பு முன்வைக்கப் பட்டது பாடசாலை அதிபராலும்  மற்றும் , மலையக முஸ்லிம் கவுன்சில் ( U C M C) நிர்வாகக்குழு உறுப்பினரும் , பெற்றாருமாகிய சுகாதாரஉத்தியோகத்தர் எஸ் எம் சியாம் டீன் ஆகியோர்களால்குறிப்பிட்ட ஆவணத் தொகுப்பு முன்வைக்கப் பட்டது.

குறித்த ஆவணத் தொகுப்பின் மூலம் பாடசாலையின் வளர்ச்சி மற்றும் சவால்களை நன்கு உணர்ந்த மாகாண முதலமைச்சர் திரு சாமர சம்பத் திசாநாயக அவர்கள் இப்பாடசாளியின் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்க தாம் நடாடிக்கை மேற்கொள்வதாகதமதுரையின் போது உறுதியளித்திருந்தார். மாகாண முதலமைச்சரின்வாக்குருதிக்கமைய ,ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திருமதி அம்பன் வெல , மாகாண கல்விப் பணிப்பாளர் திரு ஆர் எம் பி பியதாச ரத்நாயக , வலய கல்விப்பணிப்பாளர் திரு ஆனந்த ரத்நாயக,மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு ஜெயதிலக , மற்றும் மாகாண பொறியியலாளர் காரியாலய உத்தியோகத்தர் உட்பட கல்வித்திணைக்கள அனைத்து உயரதிகாரிகளும் கடந்த புதன் கிழமை ( புதன்கிழமை மக்கள் சந்திப்பு நாள் என்பது குறிப்பிடத்தக்கது) ப/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு கல்லூரியின் குறைபாடுகள் அனைத்தையும் ஆவணங்களாக தொகுத்தெடுத்து அவற்றை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கைகளை மேட்கொண்டுள்ளனர்.

 

அதற்கமைய ...

 

✓ மூன்று மாடிக் கட்டடத்தின் மூன்றாம் கட்டம்
✓ விஞ்ஞான ஆய்வு கூடம்
✓ அருகில் உள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை ( லங்கமபாசல ஹொண்தம பாசல ) திட்டத்திற்கு உள்வாங்குதல் 
✓ பாடசாலைக்கான உள்ளக பாதை செப்பனிடல்
✓ தேவையான தளபாடங்கள் 
✓ மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு மதில்
✓ மூன்று மாடிக் கட்டடத்தின் பின்புற பாதுகாப்பு மதில் (RETAINING WALL)
✓  பேன்ட் வாத்தியக் கருவிகள் 

போன்ற அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக அமுலாகும் வகையில் செயட்படுத்த உரிய அதிகாரிகளுக்கு பாடசாலை வளாகத்தில் வைத்தே பணிப்புரை வழங்கப் பட்டுள்ளது.

 

 

 அத்துடன் ஊவா மாகாண மட்டத்தில் 

தெரிவு செய்யப்பட்ட முப்பது மும்மொழி பாடசாலை அபிவிருத்தி திட்டத்திற்காக தெரிவாகியுள்ள ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையாக ப/ பாத்திமாமுஸ்லிம் மகளிர் கல்லூரி தெரிவு செய்யப் பட்டுள்ள நற்செய்தியையும்மாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கடந்தாண்டு (2015) க பொ த (சா/ த) பரீட்சையில் கணித பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பாடசாலைகளுள் நான்காவது இடத்தை பெற்ற பாடசாலையாகவும் , அத்வேளை சிறந்த நிதி முகாமைத்துவ பாடசாலைகளுள் இரண்டாம் நிலை பாடசாலையாகவும் ப/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி தெரிவாகியுள்ளதையும் மாகாண கல்விப்பணிப்பாளரினால் மாகாண கல்விச் செயலாளருக்கு எடுத்துக் கூறப் பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும்.  


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top