Free Space

அமெரிக்க புளோரிடா பள்ளிவாயலில் தீ ! ஈதுல் அல்ஹா பெருநாள் தினத்தில் சம்பவம்



அமெரிக்காவின் புளோரிடா போர்ட் பியர்சில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஈதுல் அல்ஹா தினத்தில் தீ வைப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று திங்கள் அமெரிக்க நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தீ சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் தீ அணைப்பு படையினர் பள்ளிவாயலுக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

ஒரால்டோ இரவு கேளிக்கை விடுதி தாக்குதலை மேற்கொண்ட உமர் மதீன் குறித்த பள்ளிவாயலுக்கே செல்வது வழக்கம் என குறிப்பிட்டுள்ள அமெரிக்க காவல்துறை இது திட்டமிட்ட சதி வேளையாக இருக்கும் என சந்தேகிக்கின்றனர்.


அமெரிக்க புளோரிடா பள்ளிவாயலில் தீ ! ஈதுல் அல்ஹா பெருநாள் தினத்தில் சம்பவம் அமெரிக்க புளோரிடா பள்ளிவாயலில் தீ ! ஈதுல் அல்ஹா பெருநாள் தினத்தில் சம்பவம் Reviewed by Madawala News on 9/13/2016 07:52:00 AM Rating: 5