Thursday, September 15, 2016

உண்மைகள் உறங்குவதில்லை! அதாவுல்லாஹ் மற்றும் அப்துர் ரஹ்மானின் நிலைப்பாடுகளை வரவேற்கிறேன்...

Published by Madawala News on Thursday, September 15, 2016  | 


கடந்த 11-09-2016 ஞாயிறு இரவு வசந்தம் தொலைக்காட்சி  நடத்திய'அதிர்வுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமாகிய சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள் கிழக்கு  மாகாணம்  வடக்குடன் இணையக்கூடாது என்பதற்கான உண்மையான உறுதியான  தர்க ரீதியான நடைமுறை  யதார்த்தங்களின்  அடிப்படையில் கிழக்கு  மக்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தும்  வகையில் எடுத்துக் கூறியகாரணங்கள் அனைத்தும் வலுவானதும்  வரவேற்கத் தக்கதுமாகும்.


அவர் எடுத்துக் கூறிய வரலாற்று உண்மைகள் அவரின்நிலைப்பாட்டை நிரூபித்துக் காட்டியுள்ளனதற்கு எமது பாராட்டுக்கள். இதேதொனியில் வாதிட்ட நால்லாட்சிக்கான சமூக அமைப்பின் அமைப்பாளர் சகோ.அப்துல் ரகுமானையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மறைவிற்குப் பிறகு – ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய அக் கட்சியின் அதிஉயர்பீடத்தில் தவிசாளராக சகோ.அதாவுல்லாஹ் அவர்களும் ,  செயலாளராக டாக்டர் ஹப்ரத்தும்,  மசூராசபையின் தலைவராக (எஸ்.சுபைர்தீன்) நானும்,  பொருளாளராக இன்றைய கிழக்கின் முதலமைச்சர் சகோ.ஹாபீஸ் நசீரும் இருந்தபொழுதுஅன்றைய ஐ.தே.முன்னணி (U.N.F) அரசாங்கம் நோர்வேயின் மத்தியஸ்துடன் புலிகளுடன் பேரம் பேசி ஒரு யுத்த நிறுத்த உடன்பாட்டை  ஏற்படுத்தியது அதன்பிரதிபலனாக புலிகள் வடகிழக்கில் ஆயுதங்களுடன் நடமாடமுடிந்ததோடு – பொலிஸாருக்கும்  இராணுவ த்திற்கும்  அவர்களைகைது செய்யவோ – ஆயுதங்களை களையவோ முடியாத நிலையொன்று ஏற்பட்டிருந்தது. புலிகள் தங்கள் பதுங்குமிடத்திலிருந்து வெளிவந்து விசேடமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை கடத்தவும் ,  பயமுறுத்தி கப்பம் பெறவும் முஸ்லிம்களை கொலை செய்யவும் தொடங்கினர் பொலிஸில் முறையிட்டும் – பொலிஸாரும்;  இராணுவமும் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு நிலையில் இருந்தனர். கிழக்கு முஸ்லிம்களின் அவலநிலை கேட்போர் யாருமின்றி சூனியமாக நின்றது. முஸ்லிம்களின் உயிர்கள் புலிகளினால் பகிரங்கமாகப் பறிக்கப்பட்டன. முஸ்லிம்களின் உயிருக்கு மட்டுமல்ல பிணங்களுக்கும் (மையத்) மரியாதயிருக்கவில்லை. வாழைச்சேனையில் அநியாயமாக கொலைசெய்யப்பட்ட இரண்டு முஸ்லிம்களின் ஜனாசாக்களை அவற்றின்    பெற்றோர் கோரிய போதும்  பொலிஸார் மற்றும்யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள்முன்னிலையிலேயே  அவை புலிகளால்  எரிக்கப்பட்டன..திருகோணமலையில்;  ; உறவினர்கள் முன்னிலையிலே முஸ்லீம்களின் ஜனாசாக்களின்  கண்களைப்  புலிகள் பிடுங்கிஎடுத்தனர் இந்த மாறாத உண்மைகள் உறங்குவதில்லை. 

இவ்வாறு அநியாயம் நடந்து கொண்டிருந்த ஒரு சூழலில் மு.கா.வின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட U.N.F அரசாங்கத்தில் மு.கா.தலைவர் ஹக்கீம் ஐந்து முக்கியமான அமைச்சுக்களை தாங்கிய அமைச்சராக இருந்த போது முஸ்லிம்களுக்கு புலிகளால் நடந்துக் கொண்டிருந்த அட்டூழியங்களுக்கு பரிகாரம்  தேடமுடியாத – நிலையில் அவர் இருந்தார். அவருடைய செயற்பாடேல்லாம் U.N.F – புலிகள் ஒப்பந்தம் தொடரவேண்டும் என்பதாகவே இருந்தது.

 

அரசாங்கமும் புலிகளும் யுத்த நிறுத்தத்தின் பின்பு – டோக்கியோ ஒஸ்லோ  பாங்கொக்  ஆகிய நகரங்களில் பேச்சுவார்த்தைகள்நடைபெற ஏற்பாடுகள் நடந்தனமுஸ்லிம்கள் சார்பில் மு.காதனித்தரப்பாக இதில் இடம்பெற வேண்டுமென மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களும் – உயர்பீடமும் வலியுறுத்தின. இதன் விளைவாக ஹக்கீம் தனியாக பிரபாகரனை சந்திக்கச் சென்று தனித்தரப்பு வழங்க சம்மதம் தெரிவித்ததாக சொன்னார். ஆனால்இ பேச்சுவார்த்தையில் தனிதரப்பின்  அரசாங்கபிரதிநிதியாகவே  கலந்து கொண்டார்இந்த இரட்டை வேசத்துக்குஎதிராக மு.காதலைவரிடம் பல கேள்வி கணைகளைசகோ.அதாவுல்லாஹ் தொடுத்தார் என்பது உண்மையே. உண்மைகள் உறங்குவதில்லை தான்;. 

 

ஹக்கீம் பிரபா ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனம் அடகுவைக்கப்பட்டது. இது முஸ்லிம்கள் மத்தில் மனக்குமுறலை ஏற்படுத்தியது. அன்று 2002 ஜூலை மாதம் மு.கா.வின் அதி உயர் பீடம் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்றபொழுது அதாவுல்லாஹ் பின்வருமாறு கதறி அழுதார்;.ஹக்கீமப் பார்த்து அவர் 'இதோ இவர் தான் புலிகளின் தலைவர் ! இங்கே இருக்கிறார் ! இந்த அதிஉயர்பீட கூட்டத்தில் இருக்கின்ற  எவரும் எனக்கு முக்கியமில்லைஇரண்டு பேர்கள் தவிர. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மறையும்போது எங்களுக்கு இருவரை மாத்திரம்தான் தந்திருக்கின்றார்கள். ஒருவர்  சுபைர்தீன் ஹாஜியார்.மற்றவர் னுசு.ஹப்ரத் அவர்கள்சுபைர்தீன் ஹாஜீ.......  !னுசு.ஹப்ரத்....... ! இதோ உங்கள் முன் நான் கண்ணீர் வடிக்கிறேன். இந்தக் கண்ணீர் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கண்ணீர். இந்தக் கண்ணீரால் உங்கள் கால்களை கழுவிக் கேட்கிறேன். எங்களை இந்தப் புலிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் மேலே கூறப்பட்டது  அவரின் வாயில் இருந்து வந்த உள்ளக்குமுரல்களைக் கக்கும்  வார்த்தைகள்அந்த வார்த்தைகள் எனதுஉள்ளத்தை உருக்கியதுனெனில்  உண்மைகள் ஒருபோதும்உறங்குவதில்லை.

இதனைத் தொடர்து – ஹக்கீம் புலிகளுடன் ஒஸ்லோவில் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது – 37 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவசரமாகக் கூடிய மு.கா. அதிஉயர்பீடம் ஹக்கீமை பதவி நீக்கம் செய்துவிட்டு ளு.சுபைர்தீன் அவர்கள் மு.கா. தலைவராக பிரகனப்படுத்தியது. எனக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவு பெறும்  வரையில் – ஏறக்குறைய வாரங்கள் நானே மு.கா. வது  தலைவராக இருந்தேன்தடையுத்தரவுக்குப் பிறகும்ஏறக்குறையமூன்று மூன்று மாதங்கள் இரட்டைதலைமைத்துவத்தின் கீழ் இயங்கினோம்இதற்கு எதிராகநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தோம். 

போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றோம். அதன் பிறகு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து  கட்சி மேலும்கூறாகக்கூடாது என்பதற்காகவும் சமுதாய நலன் கருதியும் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 

25.02.2003 இல் அஷ்ரப் காங்கிரஸ் என்ற பெயரில் எமது அமைப்பு இயங்கத் தொடங்கியது. அதன் தலைவராக நானும் (ள.சுபைர்தீன்) தவிசாளராக  .எல்.எம்.அதாவுல்லாஹ்வும் செயலாளராக னுசு.ஹப்ரத்தும் பொருளாளராக ஹாபீஸ் நசீரும் இயங்கினோம். இதில் உயர் பீட அங்கத்தவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான காலஞ் சென்ற நூர்தீன் மசூர்  மொஹிதீன் அப்துல் காதர்,  , எம். வீ. ஏ. அஸீஸ்மசூர் மௌலானா ஆகியோருடன்   னுசு உதுமா லெவ்வையும்  முன்னாள் கொழும்பு மேயர்  ஜேஎம் முஸம்மிலும்  இருத்தனர். 

11-09-2016  அன்று  'அதிர்வுதொலைக்காட்சி நிகழ்வில் அஷ்ரப் காங்கிரஸ் புரட்சிகர தோற்றம் பற்றி கூறுவதற்கு சகோ.அதாவுல்லாஹ்  மறந்திருக்கக் கூடும்அஷ்ரப் காங்கிரஸின்தோற்றம்  முஸ்லிம் அரசியலில் ஒரு திருப்பு முனையாகஅமைந்தது  என்றால் அது மிகையாகாது நிகழ்வுகள் வரலாராகமாறினாலும் உண்மைகள்  உறங்குவதில்லை என்பதும்உண்மையே. 

நான் அஷ்ரப் காங்கிரஸ் தலைவராக இருந்தபொழுது  30.05.2003 ல் என்னால் விடப்பட்ட  பகிரங்க ஊடக அறிக்கையில்சகோ.அதாவுல்லாஹ்வின் ஊந்துதல் காரணமாக வடக்கும்கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்று  கூறியிருந்தேன்அன்று நான் சகோஅதாவுல்லாவுடன் சேர்ந்து முழங்கிய உரிமைக் குரல் என்றும் ஓயாது. ஏனெனில் உண்மைகள் உறங்குவதில்லை. 

 அன்றைய 'அதிர்வுநிகழ்ச்சியில் கிழக்கின் உள்ளக் குமுரலையும்;எழுப்பிய அதாவுல்லாஹ்வுக்கும் சகோ.அப்துல் ரகுமானுக்கும் எனது பாராட்டுக்கள். ஏனெனில் ,  உண்மைகள்  உறங்குவதில்லை.மேலும் ,  உண்மைகள் எப்போதும் ஊமையாக இருப்பதுமில்லை.

 

S. சுபைர்தீன்.

செயலாளர் நாயகம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top