tg travels

ரமித் ரம்புக்வெல்லவுக்கு பிணை மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு


 
இன்று காலை கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 07 சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். 

மது போதையில் காரை செலுத்தியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமேவிற்கான விளக்கமறியல் இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 2ம் திகதி வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார். 

நிதி மோசடி குற்றச்சாட்டில் கடந்த 15ம் திகதி அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 
ரமித் ரம்புக்வெல்லவுக்கு பிணை மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு ரமித் ரம்புக்வெல்லவுக்கு பிணை மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு Reviewed by Madawala News on 9/22/2016 12:02:00 PM Rating: 5