Accaddemy

புசல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடம்மாற்றம் !



புஸ்ஸல்லாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வாலிபர் சிறைகூட்டத்துக்குள் பலியான சம்வத்தை தொடர்ந்து அங்கு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று பகல் 12.00 மணிமுதல் 3.00 மணிவரை சுமார் 1000 தோட்ட தொழிலாளர்கள் கண்டி - நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரச்சினைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறும், நடைபெற்றது தற்கொலை அல்ல கொலை அதற்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததால் போராட்டம் நீடித்தது. இதனையடுத்து, அமைச்சர் பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்தனர். 

பின்னர் மக்களின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் கவனத்திற்கு இவர்கள் கொண்டு வந்தனர். 

இதன்படி குறித்த பொலிஸ் நிலைய பொருப்பதிகரியை உடன் இடம்மாற்றம் செய்வதாக பொலிஸ்மா அதிபர் வழங்கிய வாக்குறுதி பற்றி பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் ஆகிய இருவரும் மக்களிடம் எடுத்து கூறியதற்கு இணங்க ஆர்பாட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

இளைஞரின் சடலம், கம்பளை உதவி நீதிபதியின் விசாரணைக்கு பின்னர், பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்திய பீடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

4 அடி உயரமான கதவில் 06 அடி மனிதன் தூக்கில் தொங்கியதாக கூறப்படும் விடயம் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது
புசல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடம்மாற்றம் ! புசல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடம்மாற்றம் ! Reviewed by Madawala News on 9/18/2016 09:12:00 PM Rating: 5