Accaddemy

ஸாஹிரா கல்லூரி பாதைக்கு காபட் இடும் பணிகள் நிறைவு ...!!

 

-மொஹமட் ரிம்ஸான்-
கடந்த காலங்களில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட கம்பளை ஸாஹிரா கல்லூரி பாதை (Dr Badiudin Mahmood road) கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும், மத்திய மாகாண சபை உறுப்பினரும், பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்‌ஷமன் கிரியெல்ல அவர்களின் முஸ்லிம் விவகார செயலாளருமான  ஹிதாயத் சத்தார் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க கெளரவ. அமைச்சர் கிரியெல்ல அவர்களினால் நேரடி தலையீட்டினால் காபட் இடப்பட்டு  செப்பனிடப்பட்டது.

கடந்த 21 வருட காலங்களில் பல அரசியல்வாதிகள் இந்த பாதையை காபட் செய்து தருவதாக வாக்குறுதிகள் வழங்கியிருந்தலும் அது நிறைவேற்றப்படாத நிலையில் கம்பளை சாஹிராவின் பழைய மாணவரான ஹிதாயத் அவர்களின் நேரடி வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாதை மீள் புனரமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி காபட் இடப்பட்டு செப்பனிடப்படும் தருணத்தில் அங்கு களவிஜயம் மேற்கொண்டிருந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத சத்தார் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்..

கடந்த மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பாதை அபிவிருத்திகளின் போது முஸ்லீம் கிராம பாதைகள் அபிவிருத்திகள் தொடர்பாக முக்கியத்துவம் வழங்கவில்லை.ஆனால் இந்த அரசில் இன மத பேதங்களுக்கு அப்பால் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

கண்டி வாழ் முஸ்லீம்கள் அமைச்சர் கிரியல்ல அவர்களின் வெற்றிக்கு வாக்களித்தார்கள் அதற்கு கைமாறாக எதிர்வரும் இரண்டு வருட காலத்திற்குள் சகல முஸ்லிம் கிராம பாதைகளையும் கெளரவ. அமைச்சர் கிரியெல்ல காபட் செய்து முடிப்பதற்கு   நடவடிக்கை எடுத்துவருகிறார் என  குறிப்பிட்டார்.
ஸாஹிரா கல்லூரி பாதைக்கு காபட் இடும் பணிகள் நிறைவு ...!! ஸாஹிரா கல்லூரி பாதைக்கு காபட் இடும் பணிகள் நிறைவு ...!! Reviewed by Madawala News on 9/14/2016 12:13:00 AM Rating: 5