Accaddemy

ஜனாதிபதி சிவில் அமைப்புகளுடனான நேற்றைய சந்திப்பின் விபரம்..

ஜனாதிபதி மைத்ரியின் வெற்றிக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருடன் இணைந்துகொண்ட 48 சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசியல்கட்சி பிரதிநிதிகள் நேற்று இரவு ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இதன்போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்த சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கமாறும் வழியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நல்லாட்சி அமைச்சர்கள் மற்றும் சோபிக்க தவறிய அமைச்சர்களை பதவி விளக்கவும்,பாரத லக்‌ஷன் கொலை வழக்கினை துரிதமாக விசாரனை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது போல முன்னர் இடம்பெற்ற குற்றச்செயல்களை மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவர்றுக்கு செவிசாய்த்துள்ள ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் சந்திப்பில் பேராசியர் சரத் விஜேசூர்ய அவர்கள் ஜனாதிபதிக்கு விஷேட விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது கடந்த 2014 டிசம்பர் 2 ம் திகதி ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகள் அடங்கிய மெமரண்டம் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயளாலர் நஜா முஹம்மத் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.

தற்போதைய அரசின் சில செயற்பாடுகள் குறித்து தான் பூரணமாக திருப்தி அடையவில்லை என குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சிவில் அமைப்பு உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி சிவில் அமைப்புகளுடனான நேற்றைய சந்திப்பின் விபரம்.. ஜனாதிபதி சிவில் அமைப்புகளுடனான நேற்றைய சந்திப்பின் விபரம்.. Reviewed by Madawala News on 9/14/2016 08:10:00 AM Rating: 5