Tuesday, September 6, 2016

முஸ்லிம் இளைஞர்கள் சமூக ஆய்வு அமையத்தின் சிரமதான நிகழ்வு

Published by Madawala News on Tuesday, September 6, 2016  | 

 -எம்.வை.அமீர்-
முஸ்லிம் இளைஞர்கள் சமூக ஆய்வு அமையத்தினால், அவ்அமைப்பின் ஆலோசகரும்இலங்கை அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் அமைச்சின் தொடர்பாடல் அதிகாரியும்அந்நிறுவனத்தின் தலைவர்ஏ.எம்.ஜெமீலின் செயலாளருமாகிய ஏ.எல்.முக்தாறின் (ஜஹான்) நெறிப்படுத்தலுக்கு அமைவாகஅமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தாரின் தலைமையில் சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்தப் பூங்கா அருகாமையில் 2016.09.05 ஆம் திகதியன்று மாபெரும் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும்அம்பாறை மாவட்ட அமைப்பாளரும்இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய  கலாநிதி ஏ.எம்.ஜெமீலும்கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர்  ஏ.எல்.எம்.சலீமும் மற்றும் விசேட அதிதியாக இலங்கை அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் அமைச்சின் தொடர்பாடல் அதிகாரி ஏ.எல்.முக்தார்(ஜஹான்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பொதுமக்கள் தமது மாலைப் பொழுதினை கழிப்பதற்கு தகுதியற்ற நிலையில் மிகவும் அசௌகரியம் மிக்கதாக  மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்று கிடந்த இவ்விடத்தைசிரமதானமூலம் சுத்தப்படுத்தியதுடன் குறித்த இடத்தை பசுமையாக்கும் நோக்கில் மரங்களும் நடுகை செய்யப்பட்டன. 

இங்கு கருத்துத்தெரிவித்த கலாநிதி ஏ.எம்.ஜெமீல், முஸ்லிம் இளைஞர்கள் சமூகஆய்வு அமையம் (MYSRO) மிஸ்ரோஅமைப்பானது இப் பிரதேசத்தில் பாரிய சேவைகளை செய்து பிரதேசத்தை மறுமலர்ச்சியடையச்  செய்கின்றது. அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் படையணியாகவும்  செயற்படுவது பாராட்டத்தக்க விடயமாகும். நானும் உங்களை போன்று சிருவயதிலே எமது சமுகத்துக்காய் சமுக சேவையில் களம் இறங்கினேன். நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது எமக்கு அல்லாஹ் நாம் நினைத்துபார்க்காத அளவுக்குசமூகத்திலே  உயர்வைத்தருவான். எனக்கு அரசியல்லில் களம் இறங்க ஆசை இருக்கவில்லை.  ஆனால் உண்மையான சமூக பற்று என்னிடம் இருந்தது அந்த உனர்வை என்னிடம் உனர்ந்த மக்கள் என்னை அரசியல்வாதியாக தெரிவுசெய்தார்கள்.
நிங்கள்ளும் இந்த சமூகத்தை உயர்த்த, தியாகம்  செய்கின்றீர்கள் உங்களை அல்லாஹ் கைவிடமாட்டான். நிச்சயம் இந்த மிஸ்ரோ அமைப்பை இந்த சமூகத்தில் பாரிய அமைப்பாக மாற்ற நானும்உங்களது ஆலோசகரும் எனது செயலாளருமான ஜாஹானும்  தாயாராக உள்ளோம். என்றும் தெரிவித்தார்.

இன்நிகழ்வில் ACMCயின் சாய்ந்தமருது மத்திய குழுவின் பிரதித் தலைவர் எஸ்.டி. கபீர் எம்.ஐ.ஏ.றஹீம் ஆசிரியர் மற்றும் முக்கியபிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த சிரமதான நிகழ்வில் 70 க்கு மேற்பட்ட இளைஞர்கள் காலை 8.00 மணிமுதல்  6.00மணிவரை பண்குகொண்டிருன்தது குறிப்பிடத்தக்கது.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top