Oceas

நாமலின் கார் தொடர்பான மர்மர் வெளியானது...


நேற்று FCID யினரால் பறிமுதல் செய்யப்பட்ட  முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு சொந்தமானது என கருத்தப்படும் சொகுசு கார் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் ராஜபக்‌சவின் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு வழங்கப்பட்ட பேர்மிட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த கார் இலக்க தகடு இன்றியே பாவனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில்  இதே கார் கடந்த 2014 வருடம் இலக்க தகடின்றி கொழும்பில் வலம் வந்தவேளை பேஸ்லைன் வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது கார் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பு பிரிவினர் காரை அப்புறப்படுத்தியுள்ளனர்.

பாதிப்புக்குள்ளான முச்சக்கர வண்டி தரப்புக்கு எதுவித நஷ்ட ஈடு வழங்கப்படாத நிலையிலும் விபத்தில் கடும் காயமடைந்தவர்களுக்கும் எதுவித நீதியும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த கார் மூலம் சட்டவிரோத செயற்பாடுகள் இடன்பெற்றுள்ளதாக என்பது தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தற்பொது குறித்த காரை மேலதிக விசாரனைகளுக்காகவே  FCID யினர் தடுத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமலின் கார் தொடர்பான மர்மர் வெளியானது... நாமலின் கார் தொடர்பான  மர்மர் வெளியானது... Reviewed by Madawala News on 9/06/2016 03:15:00 PM Rating: 5