Accaddemy

தற்போது நாட்டில் இடம்பெறும் இனவாத செயற்பாடுகளை வைத்து நாம் கீழ்த்தரமான அரசியல் லாபம் தேடவில்லை...


முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்
கல்­ஹின்­னையில் நடை­பெற்ற அசம்­பா­வி­தங்கள் தொடர்­பாக இந்த அரசின் அமைச்­சர்கள் பத்­தி­ரி­கை­களில் அறிக்­கை­களை விடுத்து வரு­கி­றார்கள்.

நல்­லாட்­சியை நடாத்தும் அரசின் பிர­தி­நி­தி­க­ளான இவர்கள் அறிக்­கைகள் விடு­வதை விடுத்து முஸ்­லிம்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்­துக்கு உத்­த­ர­வாதம் வழங்­கு­வ­தற்கு உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­களை உடன் எடுக்­க­வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற இரு­த­ரப்பு மோதல்­க­ளை­ய­டுத்து அப்­ப­கு­தியில் இடம்­பெற்று வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்கள் குறித்து வெளி­யிட்­டுள்ள  அறிக்­கை­யிலே இவ்­வாறு  கோரி­யுள்ளார்.

மேலும் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது, தற்­போ­தைய சூழ்­நி­லையில் நாட்டின் கிரா­மங்­களில் வசித்து  வரும் முஸ்­லிம்கள் பாது­காப்­பற்ற அச்ச நிலை­யிலே வாழ்­கின்­றனர். 

மஹிந்த  ராஜபக் ஷவின் அர­சாங்­கத்தின் கீழ் இவ்­வா­றான இனக் குரோத நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன என்று இவர்கள் தான்  அன்று முஸ்­லிம்கள் மத்­தியில் கூறி முஸ்­லிம்­களின் வாக்­கு­களை  இந்த அர­சாங்­கத்­திற்கு பெற்­றுக்­கொ­டுத்­தார்கள் என்­பதை முழு நாடே அறியும்.

தாம் பத­விக்கு வந்­த­வுடன் இவ்­வா­றான அசம்­பா­வி­தங்­க­ளுக்கோ, இன எதிர் சக்­தி­க­ளுக்கோ ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என்று உறு­தி­ய­ளித்­தார்கள். 

எனவே முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்ற ஜனா­தி­ப­தியும் குறிப்­பாக பிர­த­மரும் இம்­மோ­ச­மான இனக்­கு­ரோத சக்­தி­களை அடக்­கு­வ­தற்கும், முஸ்­லிம்கள் மத்­தியில் நிலவும் அச்­சத்தைப் போக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென  சமூகம் சார்­பாக கோரிக்கை விடுக்­கிறேன். 

இவ்­வா­றான சம்­ப­வங்­களின் போது அன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் வாய் வீச்­சா­ளர்­களாய் பத்­தி­ரி­கை­க­ளிலும் தொலைக்காட்சிகளிலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.  

ஆனால்  நாம் தற்போது நடைபெறும் சம்பவங்களைப் பார்த்து  அப்படியான கீழ்த்தரமான அரசியல் லாபம் தேடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

தற்போது நாட்டில் இடம்பெறும் இனவாத செயற்பாடுகளை வைத்து நாம் கீழ்த்தரமான அரசியல் லாபம் தேடவில்லை... தற்போது நாட்டில் இடம்பெறும் இனவாத செயற்பாடுகளை வைத்து நாம் கீழ்த்தரமான அரசியல் லாபம் தேடவில்லை... Reviewed by Madawala News on 9/21/2016 10:08:00 AM Rating: 5