Free Space

பான் கி மூனின் வருகையும் முஸ்லிம் தலைமைகளின் மெளனமும்...


-எஸ்.றிபான் -
ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான் கி மூன் திட்­ட­மிட்­ட­படி 31.08.2016 புதன்­கி­ழமை இரவு 7.30 மணி­ய­ளவில் இலங்கை வந்­த­டைந்தார்.

இவ­ரது வருகை இலங்கை அர­சி­யலில் முக்­கிய அம்­ச­மாக கணிக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையின் இனப் பிரச்­சினை விட­யத்தில் புதிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள், அர­சியல் தீர்வு, மீள்­கு­டி­யேற்றம் போன்­ற­வைகள் குறித்தும் பான் கி மூன் இலங்­கையின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் ஆகி­யோரை அவ­ரது நிகழ்ச்சி நிரலுக்கமைய சந்திக்கிறார்.

இன்று வெள்­ளிக்­கி­ழமை (02.09.2016) யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்யும் பான் கி மூன் அங்கு நலன்­புரி முகாம்­களில் உள்ள மக்­களை சந்­திக்­கவுள்ளார். அத்­தோடு, கொழும்பில் கதிர்­காமர் மத்­திய நிலை­யத்தில் விசேட உரை­யாற்றவும் ஏற்பாடாகியுள்ளது. இதற்கு முன்னர் மஹிந்­த ­ரா­ஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது ஒரு தடவை பான் கி மூன் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான் கி மூன் அர­சாங்­கத்தின் தலை­வர்­க­ளையும், தமிழர் தரப்பு பிர­தி­நி­தி­க­ளையும் சந்­திப்­ப­தற்கும், அவர்­க­ளுடன் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விவ­கா­ரத்தைப் பற்­றியும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் கேட்­ட­றிந்து கொள்­வ­தற்கும் ஏற்­ற­வ­கையில் அவ­ரது நிகழ்ச்சி நிரல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆயினும், முஸ்லிம் கட்­சி­க­ளையோ, முஸ்லிம் அமைப்­புக்­க­ளையோ சந்­திப்­ப­தற்கு நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

பான் கி மூனின் நிகழ்ச்சி நிரலை இலங்கை வெளி­நாட்டு அமைச்சும், கொழும்பில் உள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் காரி­யா­ல­யமும் இணைந்தே தயா­ரிக்கும். அர­சாங்கம் பான் கி மூனை தமிழர் தரப்­பினர் சந்­திப்­ப­தற்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ள போதிலும், முஸ்லிம் கட்­சி­க­ளையோ அல்­லது முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­தி­க­ளையோ சந்­திப்­ப­தற்­கு­ரிய வாயப்பை ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வில்லை. இதன் மூலம் இலங்கை அர­சாங்கம் முஸ்­லிம்­களை இனப் பிரச்­சி­னை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­தொரு இன­மாக கணக்கில் கொள்­ள­வில்லை என்று தெரி­கின்­றது.

முஸ்­லிம்­க­ளினால் முன் வைக்­கப்­பட்டு வரு­கின்ற பிரச்­சி­னை­களை அர­சாங்கம் ஏற்றுக் கொள்­ள­வில்லை என்று தெரி­கின்­றது. அர­சாங்­கமும், தமிழ்த் தேசிய கூட்ட­மைப்பும் இணைந்து வழங்கும் தீர்­வினை முஸ்­லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்­டு­மென்­ப­தா­கவே அர­சாங்­கத்தின் கொள்கை அமைந்­துள்­ள­தாகத் தோன்­று­கின்­றது.

அர­சாங்கம் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லா­ளரின் கவ­னத்­திற்கு கொண்டு போக­வி­ரும்­ப­வில்லை. முஸ்­லிம்கள் அர­சாங்­கத்தின் தீர்­வினை ஏற்றுக் கொள்­வார்கள் என்­ற­தொரு தோற்­றப்­பாட்டை பான் கி மூனுக்கு காட்­டு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. அத்­தோடு, அர­சாங்கம் முஸ்­லிம்­களை ஒரு தனித் தரப்­பாக அங்­கீக­ரிக்­க­வில்லை என்­பது பான் கி மூனின் நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் பிர­தி­நி­தி­களை சந்­திப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­டா­துள்­ளமை காட்­டு­கின்­றது.

இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான் கி மூன் வருகை தர­வுள்ளார் என்று முஸ்லிம் கட்­சிகள் முன் கூட்­டியே அறிந்­தி­ருந்­தன.

ஆயினும், எந்­த­வொரு முஸ்லிம் கட்­சியின் தலை­வரும் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைப் பற்றி பான் கி மூனுடன் கதைப்­ப­தற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்­டு­மென்று அர­சாங்­கத்­தி­டமோ, கொழும்பில் உள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் காரி­யா­ல­யத்­தி­டமோ கோரிக்­கை­களை முன் வைக்­க­வில்லை.

ஆனால், இலங்கை வருகை தரும் பான் கி மூன் முஸ்லிம் பிரதி­நி­தி­களை சந்­திக்க வேண்டு­மென்றும், முஸ்லிம் கட்­சி­களை சந்­திக்க வேண்­டு­மென்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் சிலர் ஊட­கங்­களில் அறிக்­கை­களை வெளி­யிட்­டார்கள்.

வெறும் வெற்றுப் பேச்­சுக்­க­ளினால் முஸ்லிம் சமூ­கத்தை ஏமாற்றிப் பழகிக் கொண்ட முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தமது ஏமாற்று நாட­கத்தை பான் கி மூனின் வரு­கை­யிலும் கையாண்­டுள்­ளார்கள். ஏமா­று­வ­தற்கு முஸ்லிம் மக்கள் தயா­ராக இருக்கும் வரைக்கும் முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஏமாற்றிக் கொண்டே இருப்­பார்கள். 

கடந்த 2016 பெப்­ர­வரி 06 ஆம் திகதி ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் இள­வ­ரசர் ஹுஸைன் வருகை தந்­தி­ருந்தார். அவ­ரது நிகழ்ச்சி நிரலில் கூட முஸ்லிம் கட்­சி­க­ளையும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் சந்­திப்­ப­தற்கு நேரம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

அவர் அர­சாங்­கத்­து­டனும், தமிழர் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டார். யாழ்ப்­பா­ணத்­திற்கும் விஜயம் செய்தார்.

இவர் மக்கள் பிர­தி­நி­தி­களை சந்­திக்­க­வில்லை. இதற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எடுக்­க­வில்லை என்று குற்றம் சாட்­டப்­பட்­டது.

இலங்கை வெளி­நாட்டு அமைச்சு ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யா­ளரை சந்­திப்­ப­தற்கு ஏற்­பா­டு­களைச் செய்து தர­வில்லை என்று முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தெரி­வித்துக் கொண்­டார்கள்.

ஏற்­க­னவே, இத்­த­கை­ய­தொரு பட்­ட­றிவு இருக்­கின்ற நிலை­யிலும் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பான் கி மூனை சந்­திப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கத்தின் மூல­மா­கவும், ஐக்­கிய நாடுகள் சபையின் கொழும்புக் காரி­யா­ல­யத்தின் ஊடா­கவும் மேற்­கொள்­ளா­தி­ருந்­தமை வேண்­டு­மென்று இருந்­ததா­கவே எண்ண வேண்­டி­யுள்­ளது.

முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் முஸ்லிம் சமூ­கத்தைப் பற்றி எந்த அக்­க­றையும் கிடை­யாது.

முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், பிர­மு­கர்­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்லிம் சமூ­கத்தின் நீண்ட நிலை­பேற்­றுக்கு உதவக் கூடிய விவ­கா­ரங்­களில் அலட்சியமாக இருப்­ப­தனை முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் அங்­கீக­ரித்துக் கொண்­டி­ருக்கப் போகி­றதா என்­ப­துதான் முஸ்லிம் சமூ­கத்தின் முன் வைக்கும் எமது கேள்­வி­யாகும்.

விழிப்­ப­டை­யாத சமூகம் சிறந்த தலை­வர்­க­ளையும், மக்கள் பிர­தி­நி­தி­க­ளையும் பெற்றுக் கொள்­ளாது. இன்று ஏமாற்றுப் பேர்­வ­ழிகள் முஸ்லிம் சமூ­கத்தை பிரதிநிதித்துவம் செய்வதற்கு காரணம் முஸ்லிம் சமூகத்தின் கோழைத்­த­ன­மான போக்­கு­க­ளாகும்.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களில் முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கவனம் செலுத்­தாது இருக்­கின்­றார்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களும், அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­க­ளுக்கும் அதி­காரம் தரப்­பட வேண்­டு­மென்று அடிக்­கடி கூட்­டங்­களை நடாத்திக் கொண்­டி­ருக்கும் சிவில் அமைப்­புக்­களும், கொழும்பில் வெளி­நாட்டு தூத­ர­கங்­க­ளுக்கு சென்று முஸ்லிம் பிரச்­சி­னை­களைப் பற்றி பேசிக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் அமைப்­புக்­களும், முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் கூட ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான் கி மூனை சந்­தித்துக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை எத­னையும் பேச வேண்­டிய இடத்தில் பேச வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களில் சர்­வ­தேசம் தமது பார்­வையை முழு­மை­யாக திசை திருப்­பாது இருப்­ப­தற்­கு­ரிய கார­ணங்­களில் ஒன்­றுதான் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தா­தி­ருப்­ப­தாகும்.

அர­சாங்கம் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களைப் போன்று முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மயப்­படக் கூடா­தென்­பதில் மிகவும் கவ­ன­மாக இருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் இந்த விருப்­பத்­தைத்தான் முஸ்லிம் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், சிவில் அமைப்­புக்­களும், புத்­தி­ஜீ­வி­களும் நிறை­வேற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன.

தமி­ழர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு சர்­வ­தே­சமும், அர­சாங்­கமும் கூடுதல் கவனம் செலுத்துக் கொண்­டி­ருப்­ப­தற்கு ஆயுதப் போராட்டம் ஒரு முக்­கிய கார­ணி­யாக இருக்­கின்­றது. விடு­தலைப் புலிகள் தோல்­வி­ய­டைந்­ததன் பின்னர் தமிழர் தரப்­பினர் ஆயுதப் போராட்­டத்­தினால் சாதித்துக் கொள்ள முடி­யாத பல விட­யங்­களை ஜன­நா­யக முறையில் சர்­வ­தே­சத்தின் உத­வி­யுடன் சாதித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

தமிழர் தரப்பு அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், சிவில் அமைப்­புக்­களும், புத்­தி­ஜீ­வி­களும் தங்­க­ளது பிரச்­சி­னை­களை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தி­யமை மிகவும் முக்­கிய கார­ணி­யாகும். ஆனால், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் இன்னும் இலங்கைத் தீவிற்கு வெளியே முழு­மை­யாக செல்­ல­வில்லை. 

முஸ்­லிம்­களைப் பொறுத்த வரை பல பிரச்­சி­னைகள் உள்­ளன.

குறிப்­பாக காணிப் பிரச்­சினை, மீள்­கு­டி­யேற்றம், அர­சியல் அதி­காரம், தொழில் வாய்ப்பு, எல்லை நிர்­ணயம் இவை­களில் இன்னும் முஸ்­லிம்கள் திருப்­தி­ய­டைந்து கொள்ளும் நகர்­வுகள் அர­சாங்­கத்­தி­னாலும், முஸ்லிம் கட்­சி­க­ளி­னாலும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 

அர­சியல் அதி­காரப் பங்­கீட்டைப் பொறுத்த வரை முஸ்­லிம்கள் அதி­கா­ரங்­களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிழக்கு மாகா­ணத்தில் இருக்­கின்­றது.

கிழக்கு மாகா­ணத்தை வடக்­குடன் இணைக்க வேண்­டு­மென்று தமிழர் தரப்­பினர் வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் கிழக்கு தனி­யாக இருக்க வேண்­டு­மென்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வடக்­குடன் கிழக்கு இணைய வேண்­டுமா என்­பதில் தெளி­வற்ற போக்கைக் கொண்­டுள்­ளது.

அக்­கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சேதா­ர­மில்­லாத விட்டுக் கொடுப்பு என்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்றார். அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாட் பதி­யுதீன் கிழக்கு தனி­யாக இருக்க வேண்­டு­மென்று சொல்­லு­கின்றார்.

இவ்­வாறு அர­சியல் அதி­கா­ரங்கள் குறித்து முஸ்லிம் தலை­வர்கள் மத்­தியில் ஒரு­மித்த கருத்­துக்கள் இன்றி இருக்­கின்ற நிலையில் ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான் கி மூனை சந்­தித்து முஸ்­லிம்­களின் பிரச்­சினை பற்றிப் பேசு­வார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

திட்­டங்­களும் இல்­லாது, ஒற்­று­மையும் இல்­லாது இருக்கும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு விமோ­சனம் பெற்றுத் தர­மாட்­டார்கள். 

இவ்­வாறு முஸ்லிம் கட்­சிகள் இருப்­பது முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அறிந்து கொள்­ளாத தன்மை என்று சொல்ல முடி­யாது. முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் அதி­கா­ரங்கள் கிடைக்­காது போனால், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு இல்­லாது போனால் சமூகம் எந்­த­ள­விற்கு பாதிக்­கப்­படும் என்று தெளி­வான அறி­வினை முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கொண்­டுள்­ளார்கள்.

முஸ்லிம் பிர­தே­சங்­களில் நடை­பெறும் கூட்­டங்­களில், மக்கள் சந்­திப்­புக்­களில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்­டுமென்றும், அதன் நீளம், அகலம், ஆழம் பற்றி அழ­கா­கவும், விரி­வா­கவும் பேசிக் கொள்­கின்­றார்கள். ஆனால், அவர்கள் இவைகள் பற்றி அர­சாங்­கத்­துடன் திரை மறைவில் பேசிக் கொண்­டாலும்,  சர்­வ­தே­சத்­திற்கு எடுத்துக் கூறி அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கவும், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களில் சர்­வ­தே­சத்தின் பார்­வையை திருப்பிக் கொள்­ளவும் துணி­வ­தில்லை.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு கொண்டு செல்­லவும், அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுக்­கவும் கூடா­தென்று மந்­திர ஆலோ­சனை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதனை மீறு­வ­தற்­கு­ரிய சக்­தி­களை முஸ்லிம் கட்­சி­களும், தலை­வர்­களும் பெற்­றி­ருக்­க­வில்லை.

இன்று முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், தலை­மை­களும் எடுப்பார் கைப்­பிள்­ளைகள் போலவே இருக்­கின்­றன. தேர்தல் காலங்­களில் பணமும், தேர்­தலின் பின்னர் அமைச்சர் பத­வி­க­ளையும் பெற்றுக் கொண்டு முஸ்லிம் சமூ­கத்தை இலவு காத்த கிளி­யாக்­கு­வ­தற்­கு­ரிய அனைத்து முன் ஆயத்­தங்­க­ளையும் முஸ்லிம் கட்­சி­களும், அவற்றின் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், ஏனைய கட்­சி­களில் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் செய்­துள்­ளார்கள். அவர்கள் அர­சாங்­கத்தின் திட்­டத்­திற்கு அமை­யவே மௌன­மாக இருக்­கின்­றார்கள்.

பாம்­புக்கு வாலையும், மீனுக்கு தலை­யையும் காட்டும் நிலை­யில்தான் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், தலை­வர்­களும் உள்­ளார்கள். அர­சாங்­கத்­திற்கு ஒரு முகமும், முஸ்­லிம்­க­ளுக்கு மற்­று­மொரு முகமும் காட்டிக் கொண்­டி­ருக்கும் இவர்­களை முஸ்லிம் சமூகம் இன்னும் நம்பிக் கொண்­டி­ருப்­பது முஸ்லிம் சமூ­கத்தின் பிற்­போக்கு தன­மாகும். 

இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களில் அக்­கறை காட்­டா­தி­ருக்கும் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய நாடுகள் சபையின் அதி­கா­ரிகள் இலங்­கைக்கு வருகை தந்தால் கொழும்பில் இருக்­காது வெளி­நா­டு­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­வதும், கிழக்கு மாகா­ணத்­திற்கு அல்­லது வட­மா­கா­ணத்­திற்கு நட­மாடும் சேவை­களை நடத்­து­வது, கட்­டிட திறப்பு விழாக்­களை நடத்­து­வது, புதிய அபி­வி­ருத்தி வேலை­களை ஆரம்­பித்து வைப்­பது போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள்.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் பேசப்­ப­ட­வில்லை என்று வரும் விமர்­ச­னங்­களை திசை­மாற்றி நாங்கள் முஸ்லிம் பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­கின்றோம் என்று காட்டி மக்­களை திசை திருப்பிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

முஸ்லிம் சமூகத்தின் அபி­வி­ருத்­திதான் தமது முதற் தேவை என்று முக்­கிய பிரச்­சி­னை­களை மறந்து, தலை­வர்­களின் தில்லு, முல்­லு­க­ளுக்கு தாளம் போட்டுக் கொண்­டி­ருக்­கின்றார்கள்.

முஸ்லிம் சமூ­கத்­திற்கு அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் எமது உண்­மை­யான பிரச்­சி­னை­களை திசை­மாற்றிக் கொண்­டி­ருக்கும் அர­சியல் கட்­சி­களும், தலை­வர்­களும் முஸ்லிம் சமூகம் எனும் பஸ்­ஸிற்கு நாங்­கள்தான் சார­தியும், நடத்­து­நரும் என்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இவர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் பாதையை மாற்றி அழைத்துச் சென்று கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஈற்றில் இறங்க முடி­யாத இடத்தில் சமூ­கத்தை தள்ளிவி­டு­வார்கள் என்­ப­தனை பான் கி மூனை சந்­திப்­ப­தற்கு கோரிக்­கை­களை முன்வைக்காதிருந்தமை மூலம் தெளிவாகின்றது.

ஆகவே, முஸ்லிம் கட்­சி­களும், அவற்றின் தலை­வர்­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்தைப் பற்றி சிந்­திக்­காது சுய­ந­லன்­களில் மூழ்­கி­யுள்­ளார்கள். பதவிச் சண்­டையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பொய் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள், ஊழல்­வா­திகள் என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்­றார்கள், சமூ­க­வா­தி­க­ளாக நாட­க­மாடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அர­சியல் அதி­காரம், அர­சியல் யாப்பு போன்­ற­வை­களில் கவனம் செலுத்­தாது தனிப்­பட்ட விவ­கா­ரங்­களில் கவனம் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்­தாது அர­சாங்­கத்தை திருப்­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்கள் பான் கி மூன் அல்ல வேறு யார் வந்­தாலும் தமது இன்­றைய நிலைப்­பாட்டில் இருந்து மாற­மாட்­டார்கள்.

இவர்­க­ளிடம் இருந்து முஸ்லிம் சமூ­கத்தை பாது­காத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் ஒவ்வொரு முஸ்லிம் தனி நபரினதும் இன்றைய கடமையாகும்
பான் கி மூனின் வருகையும் முஸ்லிம் தலைமைகளின் மெளனமும்... பான் கி மூனின் வருகையும் முஸ்லிம் தலைமைகளின் மெளனமும்... Reviewed by Madawala News on 9/02/2016 07:03:00 PM Rating: 5