Free Space

பொலிஸ்,காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் ..


புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு முழு­மை­யாக வழங்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.


இவ்­வாறு காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கா­விடின் 13ஆவது திருத்தச் சட்­டத்தில் அர்த்தம் இல்­லாமல் போய்­விடும் என்று அர­சி­ய­ல­மைப் பின் நிர்­ணய சபையின் பிர­தான வழி நடத்தல் குழுவின் உறுப்­பி­னரும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ள­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். 


புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அர­சியல் தீர்வு எவ்­வாறு அமையும் என்­பது தொடர்­பிலும் இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்­தான கலந்­து­ரை­யா­டல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்தும் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 


சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் டிலான் பெரெரா இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் சிறு­பான்மை மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வா­னது அதி­கா­ரப்­ப­கிர்வின் அடிப்­ப­டை­யி­லேயே தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்று நான் ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்தே உறு­தி­யான நிலைப்­பாட்­டுடன் இருக்­கின்றேன்.அதனை யாராலும் மாற்­றி­விட முடி­யாது.எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அதி­கா­ரப்­ப­கிர்வின் அடிப்­ப­டையில் காணப்­ப­ட­வேண்­டு­மென்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன்.


குறிப்­பாக தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள 13 ஆவது திருத்த சட்­ட­மா­னது முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென்­பது எனது நிலைப்­பா­டாகும். 13 ஆவது திருத்த சட்­டத்­தி­லுள்ள அனைத்து அதி­கா­ரங்­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். 


13 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். அவ்­வாறு பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்­கினால் மட்­டுமே 13ஆவது திருத்த சட்­ட­மா­னது அர்த்­த­முள்­ள­தாக அமையும். 

பொலிஸ் அதி­காரம் என்­ற­வுடன் பெரும்­பான்மை மக்கள் ஏன் அச்­சப்­ப­டு­கின்­றனர் என்று எனக்குப் புரி­ய­வில்லை. அது ஒரு நிர்­வாக ரீதி­யி­லான செயற்­பா­டாகும். அது­மட்­டு­மன்றி காணி அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 


அதா­வது யாழ்ப்­பா­ணத்தில் இருக்கும் காணி தொடர்பில் கொழும்­பி­லி­ருந்து கொண்டு நாம் அதி­காரம் செலுத்­து­வது முறை­யல்ல. நான் இதனை வடக்­கிற்கு மட்டும் பொருந்தும் என்று கூற­வில்லை. மாறாக எனது மாவட்­ட­மான பதுளை மாவட்­டத்­திற்கும் இந்த மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்கள் இருந்தால் நன்­றாக இருக்கும். 

அதனால் தான் மாகா­ணங்­க­ளுக்கு 13 ஆவது திருத்த சட்­டத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென நான் வலி­யு­றுத்­து­கின்றேன். அது­மட்­டு­மன்றி 13 ஆவது திருத்த சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற ஒன்­றி­ணைந்த பட்­டி­ய­லையும், நீக்­கி­வி­ட­வேண்டும்.


இந்த பட்­டியல் ஊடாக ஒரு கையால் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதி­கா­ரங்கள் மறு­கையால் பறிக்­கப்­படும் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. அதா­வது கல்­வித்­து­றையை எடுத்­துக்­கொள்­வோ­மானால் பாட­சா­லைகள் அனைத்தும் மாகா­ண­ச­பை­க­ளுக்கு கீழேயே செல்­ல­வேண்டும். 


அதனை விடுத்து மத்­திய அர­சாங்­கத்­திற்கு கீழும் மாகாண அர­சாங்­கத்­திற்கு கீழும் பாடசாலைகள் இருப்பதானது வீண் பிரச்சினைகளையே உருவாக்கும். பல்கலைக்கழகங்களை மத்திய அரசாங்கம் வைத்துக் கொள்ளலாம். அதேபோன்று வைத்தியசாலைகள் விடயத்திலும், இதனை நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாறு புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும். இதனை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.



பொலிஸ்,காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் .. பொலிஸ்,காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் .. Reviewed by Madawala News on 9/17/2016 12:32:00 PM Rating: 5