Oceas

வட்டார எல்லையில் சிறுபான்மையினர் பாதிப்பு !

ஏ.எஸ்.எம்.தாணீஸ்,

வட்டார எல்லைப் பிரிப்பில் திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம்  பாதிக்கப்பட்டுள்ளமையினால் அதற்கான தீர்வினை எட்டுவது தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எம்.எஸ்.தௌபீகின் தலைமையிலான கிண்ணியா மஜ்லிஸ் ஸூரா பிரதிநிதிகளுக்கும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்குமிடையிலான சந்திப்பும், உயர்மட்ட கலந்துரையாடலும்  இன்று (29) கொழும்பு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடை பெற்றது.

Uஇக்குழுவில் கிண்ணியா மஜ்லிஸ் ஸூராவின் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துல்லாஹ் (நளிமி) உட்பட பலரும் கலந்து  கொண்டிருந்தனர்.

குறிப்பாக திருகோணமலை மாவட்ட த்திலுள்ள மூதூர், கிண்ணியா ,தோப்பூர்,கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம்,குச்சவெளி ஆகிய பகுதிகளில் புதிய வட்டார பிரிப்பில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சரிடம் ஆதாரபூர்வமான சான்றுகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அமைச்சரிடம் கையளித்ததோடு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் சிறுபான்மையினர் வட்டார எல்லைப் பிரிப்பில் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் தொடர்பாக கலந்துரையாடும் போது பெரும்பான்மையினரைக் கொண்ட கோமரங்கடவெல பிரதேச சபைக்கு 5831 வாக்காளர்களுக்கு 13 பிரதிநிதிகளும் 21069 வாக்காளர்களைக் கொண்ட கிண்ணியா நகர சபைக்கு 10 பிரதி நிதிகளும் வழங்கப்பட்டுள்ளனர்.இதன்படி கோமரங்கடவெலவுக்கு 450 வாக்காளருக்கு 1 பிரதிநிதியும் கிண்ணியா நகர சபைக்கு 2100 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதியும் என பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதை போன்று திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய பகுதிகளிலும் சிறுபாண்மையினர் வாழும் பிரதேசங்களில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளமையினால் உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இவ் கலந்துரையாடலை அவசரமாக மேற்கொண்டதாகவும் அமைச்சரிடம்     பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மேலும் தெளிவூட்டினார்.

இக் கலந்துரையாடலின் போது மேற்கூறப்பட்ட பிரச்சினையை அமைச்சரவை உப குழுவில் சமர்ப்பித்து தீர்க்கமான தீர்வொன்றினை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகிடம் வாக்குறுதியளித்தார்.

வட்டார எல்லையில் சிறுபான்மையினர் பாதிப்பு ! வட்டார எல்லையில் சிறுபான்மையினர் பாதிப்பு ! Reviewed by Madawala News on 9/30/2016 12:43:00 AM Rating: 5