Accaddemy

உதயங்க வீரதுங்கவுக்கு நல்லாட்சியில் புது கடவுச்சீட்டு !!


முக்கிய சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான அவரது உறவினர் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் காலாவதியான கடவுசீட்டுக்கு பதில் புதிய கடவுசீட்டை பெற்றுக்கொடுத்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளீன் ஜயதிஸ்ஸ இன்று மன்றில் கேள்வி எழுப்பியபோது பதில் அளித்த அமைச்சர் எஸ் பீ நாவின்ன..

உதயங்க வீரதுங்கவின் தனது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டதாக புதிய கடவுசீட்டுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் அதனால் அவருக்கு புதிய கடவுசீட்டு அவரது மனைவி ஊடாக ராஜதந்திர கடவுச்சீட்டுக்கு பதில் சாதாரன கடவுசீட்டு பெற்றுக்கொடுத்ததாகவும் உதயங்க வீரதுங்கவுக்கு கடவுசீட்டு பெற்றுக்கொடுக்க நீதிமன்ற தடையிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த நளீன் ஜயதிஸ்ஸ பலதரப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக இலங்கை பொலிஸ் மற்றும் எப் சீ ஐ டி யால் தேடப்படும் உதயங்க வீரதுங்கவுக்கு கடவுசீட்டு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் தான் கடும் அதிருப்தி வெளியிடுவதாக குறிப்பிட்ட அவர் ஒருபுறம் அரசு மக்களிடம் அவர் தேடப்படும் சந்தேகநபர் என கூறும் நிலையில் மறுபுறம் வெளிநாட்டு அமைச்சின் ஊடாக அவருக்கு கடவுச்சீட்டு பெற அனுமதி வழங்கியுள்ளது என  அவர் கண்டனம் வெளியிட்டார்.

உதயங்க வீரதுங்க ரஷ்ய உயர்ஸ்தானிகராக இருந்தபோது யுக்ரைன் கிளர்ச்சிக்குழுவுக்கு ஆயுதம் விற்பனை செய்த குற்றச்சாட்டு உள்ளிட்ட இன்னும் சில சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர் என  தேடப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.





உதயங்க வீரதுங்கவுக்கு நல்லாட்சியில் புது கடவுச்சீட்டு !! உதயங்க வீரதுங்கவுக்கு நல்லாட்சியில்  புது கடவுச்சீட்டு !! Reviewed by Madawala News on 9/08/2016 08:32:00 PM Rating: 5