அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் நூல் அறிமுகவிழா

-எம்.வை.அமீர் -

பயனுள்ள பல நூல்களைத் தந்த அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர் எழுதிய “கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்” எனும் தலைப்பிலான நூல் அறிமுகவிழா ஐ.ஏ.எல்.எம். அக்கரைப்பற்று நிறுவனத்தின் தலைவர் முஹம்மத் ஆப்தீன் ஷிஹார்டீன் தலைமையில் அக்கரைப்பற்று ரி.எப்.சி கேட்போர்கூடத்தில் 2016-09-03 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விகாஸ் கல்விநிறுவனத்தின் தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான  பொறியியலாளர் எம்.எம்.அப்துல் றகுமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன் பிரதிகளையும் வழங்கிவைத்தார்.

சிறப்பு அதிதிகளாக முன்னாள் வலய கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம், அஷ்ஷேய்க்எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி ஆகியோரும் கௌரவ அதிதிகாளாக ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை உப பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ,வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்பர் ஆகியோரும் கருத்துரைகளை விரிவுரையாளர் ரீ.கணேசரத்தினம் ஆய்வாளர் சிராஜ் மசூர், ஓய்வுநிலை கல்வி அதிகாரி என்.சம்சுதீன் ஆகியோரும் நூல் அறிமுகத்தை சுடர்ஒளி பத்திரிகையின் உயர் செயற்பாட்டாளர் ஜானதனும் வழங்கினர்.

இந்நிகழ்வின்போது கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் நூல் அறிமுகவிழா அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் நூல் அறிமுகவிழா Reviewed by Madawala News on 9/04/2016 06:54:00 AM Rating: 5