காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: மோதல்களில் இருவர் பலி


இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட வெவ்வேறு மோதல்களில் இரு ஆண்கள் பலியாகி உள்ளனர்.

ஷோபியனில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பாதுகாப்பு படையினர் வீசிய கண்ணிர் புகைக்குண்டு ஒன்று 20 வயதுடைய ஆணின் தலைமீது விழுந்து உயிரிழந்தார்.

மற்றொருவர், அனந்த்நாக் மாவட்டத்தில் பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார்.

இரண்டு மாதங்களுக்குமுன், நன்கு அறியப்பட்ட இளம் தீவிரவாத தலைவர் ஒருவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட செய்தி பரவியதை தொடர்ந்து புதிய வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

இதுவரை இந்த சம்பவங்களில் 70 பேர் வரை உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து, பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் தொலைத்தொடர்பிற்கு அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். 

-BBC -

காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: மோதல்களில் இருவர் பலி காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: மோதல்களில் இருவர் பலி Reviewed by Madawala News on 9/10/2016 06:25:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.