tg

சமூக வலைகளில் பரவியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை ; பொதுபல சேனா மறுப்பு ...


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயளாலர் கலபொடஅத்தே  ஞானசார தேரர் இஸ்லாம் மதத்தை தழுவிவிட்டதாக சமூக வலைகளில் பரப்பட்ட செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என பொதுபல சேனா அமைப்பின் பிரத நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு குர் ஆண் மொழிபெயர்ப்பு பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாகவும் அடிப்படை உண்மையற்ற செய்திகள் சமூக வலைகளில் பரப்பப்பட்ட நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள பொதுபல சேனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற செய்திகளால் வீணாக பிரச்சினை உருவாகலாம் எனவும் மேலும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வாரம் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக கடந்த 8 திகதி  கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்து வயிற்றில் கல் ஒன்று இருந்தாக அவர் சத்திர சிகிற்ச்சைக்கு உட்படுத்தப்பட்டு இதுவரை வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட தகவல்கள் மடவளை நியூசுக்கு தெரிவித்தன...
சமூக வலைகளில் பரவியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை ; பொதுபல சேனா மறுப்பு ... சமூக வலைகளில் பரவியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை ; பொதுபல சேனா மறுப்பு ... Reviewed by Madawala News on 9/17/2016 01:41:00 PM Rating: 5