Free Space

புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற சிகிச்சைகளுக்கான உதவித் தொகைகள் அ.அஸ்மின் அவர்களால் வழங்கிவைப்பு

வட மாகாணசபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய கௌரவ அ.அஸ்மின் அவர்களால் அவரது பிரமான நிதி ஒதுக்கீடுகளின் கீழ் யாழ்ப்பாணம் மன்னார் பிரதேசங்களில் பாரிய நோய்களினால் பாதிக்கப்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன. 


வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகளின் கீழ், புற்றுநோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான நிவாரணங்கள் துரிதமாகப் பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டங்கள் இப்போது முன்னெடுக்கப்படுகின்றன, இவற்றும் போதுமான சிகிச்சைகளை குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருப்பின் ஒரு சில சிகிச்சைகளுக்கு தனியார் வைத்தியசாலைகளை நாடிச் செல்ல வேன்டியுள்ளது, எனவே அவ்வாறு தனியார் வைத்தியசாலைகளுக்குச் செல்லவேண்டிய தேவையுடைய நோயாளிகள் தகுந்த வைத்தியச் சான்றிதழ்களை ஒப்படைகின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான உதவித்தொகைகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள் இதன்போது கருத்து வெளியிட்டார்.


குறிப்பாக முஸ்லிம் மக்கள் இவ்வாறான தேவைகள் ஏற்படுகின்றபோது தாம் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு இனம் மதம் மொழி என்ற வித்தியாசங்களுக்கு அப்பால் அனைவருக்கும் உதவக் காத்திருக்கின்றதாக மன்னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் திருமதி ஜூட் அவர்களர் இதன்போது கருத்துவெளியிட்டார்.


இந்நிகழ்வுகளின் போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அ.அஸ்மின் அவர்களின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் ஏ.ஆரிப், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் எம்.எம்.எம்.நிபாஹிர் ஆகியோரும் உடனிருந்தனர்.  


தகவல் என்.எம்.அப்துல்லாஹ்

புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற சிகிச்சைகளுக்கான உதவித் தொகைகள் அ.அஸ்மின் அவர்களால் வழங்கிவைப்பு புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற சிகிச்சைகளுக்கான உதவித் தொகைகள் அ.அஸ்மின் அவர்களால் வழங்கிவைப்பு Reviewed by Madawala News on 9/11/2016 09:14:00 AM Rating: 5