Oceas

ஜப்பானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்..

 


ஜப்பானில் இன்று அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.  

ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகள் கூட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்திருந்தனர்.இந்த பீதி அடங்குவதற்குள் ஜப்பானின் வடபகுதியில் உள்ள முக்கிய தீவான ஹொக்கைடோவிலும் பிற்பகல் 2.13 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.இந்த இரு நிலநடுக்கங்களால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த இரு நிலநடுக்கங்களால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. - 
ஜப்பானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்.. ஜப்பானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்.. Reviewed by Madawala News on 9/26/2016 03:25:00 PM Rating: 5