மஹிந்த ராஜபக்‌ஷ அம்பாரை விஜயம் !


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இன்று அம்பாரை மாவட்ட மஹிந்த ஆதரவு அணியினரை அம்பாரையில் சந்தித்தார்.

கூட்டு எதிர்கட்சி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இங்கு வருகை தந்திருன்ய அம்பாரை மாவட்ட முஸ்லீம்கள் குழுவும் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து அவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது அம்பாரை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் அவருடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

அம்பாரை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பலம் சேர்க்க்கும் வகையில் அர்பணிப்புடன் செயலாற்றுவதாக முன்னாள்   ஜனாதிபதிக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...
மஹிந்த ராஜபக்‌ஷ அம்பாரை விஜயம் ! மஹிந்த ராஜபக்‌ஷ அம்பாரை விஜயம் ! Reviewed by Madawala News on 9/26/2016 03:44:00 PM Rating: 5