முஸ்லிமின் வாழ்வில் ஈமானின் தாக்கம்...


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் அதனது  தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.

இத்தொடர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களினால் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும். இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் அஹ்லாக்இ தப்ஸீர்இ ஸீராஇ தாரீஹ் ஆகிய நான்கு பிரதான தலைப்புகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 6 ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில்இ மௌலவி அப்துல் முஜீப் கபூரி (தலைவர் கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல்இமாம் ஷாபி நிலையம்)   அவர்களினால் முஸ்லிமின் வாழ்வில் ஈமானின் தாக்கம் என்ற தலைப்பில் விசேட விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

மக்ரிப் தொழுகைக்கான ஏற்பாடுகள் தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு பணிவாக வேண்டப்படுகின்றனர்.

 
 
முஸ்லிமின் வாழ்வில் ஈமானின் தாக்கம்... முஸ்லிமின் வாழ்வில் ஈமானின் தாக்கம்... Reviewed by Madawala News on 9/03/2016 07:14:00 PM Rating: 5