Oceas

ஐ.நா பொதுச்செயலாளரை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சந்திப்பு..





இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற ஐ.நா மன்றின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களை வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் சார்பாக அதன் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் காரியாலயத்தில் சந்தித்தனர். 

தமிழ் மக்களுக்கான நிரந்தரத்தீர்வு விடயத்தில் முஸ்லிம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக மீள்குடியேற்றம், நல்லிணக்கம், அரசியல் யாப்பு உத்தரவாதங்கள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் இச் சந்திப்பில் கையளிக்கப்பட்டது. 

வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் சார்பாக அதன் தவிசாளர் அப்துல் ரமீஸ் அவர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அத்துடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனும் அளுநர் அலுவலகத்தில் செயலாளர் நாயகத்தின் வருகையுடன் இணைந்துள்ளார்.

ஐ.நா பொதுச்செயலாளரை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சந்திப்பு.. ஐ.நா பொதுச்செயலாளரை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சந்திப்பு.. Reviewed by Madawala News on 9/02/2016 04:48:00 PM Rating: 5