Friday, September 30, 2016

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்!

Published by Madawala News on Friday, September 30, 2016  | 

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய இராணுவ வீரர்கள் நள்ளிரவில் வான்வழியாக நடத்திய தாக்குதலில் ஏழு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதால், அங்குள்ள கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்கள் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்தியாவின் அதிரடி முடிவு

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் உரி இராணுவ முகாம் மீது கடந்த 18ம் திகதி அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும், தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் இந்திய உளவுத்துறைக்கு உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய இராணுவ வீரர்கள் நள்ளிரவில் வான்வழியாக நடத்திய தாக்குதலில் ஏழு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதால், அங்குள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்கள் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.


இதனையடுத்து நேற்று நள்ளிரவு இந்திய ராணுவ வீரர்கள் “துல்லியமான தாக்குதல்” (Surgical Strike) என்ற ரகசிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினர்.


ஹெலிகொப்டர்கள் மூலம் சிறப்பு அதிரடி படையை சேர்ந்த பாராசூட் வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஏழு இடங்களில் தரையிறங்கி, பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல், லிபா உள்ளிட்ட 7 பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

சுமார் நான்கு மணிநேர சண்டைக்கு பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.


இந்த ராணுவ நடவடிக்கைகளை தலைமைத் தளபதி தல்பீர் சிங் கட்டுப் பாட்டு அறையில் இருந்து நேரடியாகக் கண்காணித்தமை குறிப்பிடத்தக்கது.


இதனையடுத்து இரு நாடுகளிடையேயும் தற்போது போர் பதற்றம் எழுந்துள்ளது. 


இந்தியா தரப்பில் பஞ்சாப், காஷ்மீர் எல்லையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் மூத்த அமைச்சர்கள், இராணுவ தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.


மேலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என அனைத்து கட்சி தலைவர்களும் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத்த்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அனு ஆயுதங்கள் பாவனை செய்யப்பட்டால்..


பாகிஸ்தானிடம் இந்தியாவை விட 10 அணு ஆயுதங்கள்  அதிகம் உள்ளது. பாகிஸ்தானிடம் 120 அணு ஆயுதங்கள் உள்ளதா  2014 ஆம் சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் வெளியிட்ட இன்போகிராபிக் தகவலாகும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ஒரே நேரத்தில் 2.1 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்ற சூழலை தொடர்ந்து இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ருட்ஜர் கொளோரடா மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இந்த ஆய்வின் முடிவில் இரு நாடுகளும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் 2.1 கோடி  மக்கள் உயிரிழக்க நேரிடும் என தெரியவந்துள்ளது.

மேலும், பூமியை சுற்றியுள்ள ஓசோன் படலம் சுமார் 50 சதவிகிதம் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் மோசமாகி சுமார் 200 கோடி  மக்கள் வறுமையில் மூழ்குவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top