யாழ் முஸ்லிம்களுக்கு மீள்குடியேற்றத்தில் சமவாய்ப்பு வழங்கப்படும்; மாவை

இன்று (27-9-2016) இடம்பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான கௌரவ மாவை சேனாதிராஜா (பா.உ) அவர்கள் மீள்குடியேறும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களுக்கு மீள்குடியேற்ற செயற்திட்டத்தில் சமவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். 


மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்; காணியற்றோர், வீடுகளற்றோர் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டபோது இப்போது அதிகளவான யாழ் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்திலே நாட்டம் கொண்டிருக்கின்றார்கள், இதனை நாம் வரவேற்கின்றோம், அவர்களுக்கு அடிப்படை மீள்குடியேற்றப் பதிவுகளுக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றத்திற்காகப் பதிவுகளை மேற்கொள்வார்கள் என நாம் நம்புகின்றேன். அவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக பதிவு செய்கின்ற முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்படல் வேண்டும். இது குறித்த தரவுகளை மாவட்ட அரசாங்க அதிபர் துரிதமாக எமக்குக் கையளிப்பார் என எதிர்பார்க்கின்றோம்.


இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்கள் பறச்சேறிவயல் காணிகளை மேட்டுக் காணிகளாக அனுமதி தருவதில் விவசாயத்திணைக்களம் பின்னிற்பதாக அறிகின்றோம் அங்கு வீடுகளை அமைத்த மூன்று குடும்பங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம், இது குறித்து உடனடி நடவடிக்கை தேவை என்றார்; அதன்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் குறித்த மக்கள் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றவர்களாகும், அவர்கள் வடிகாண்களை மறைத்து வீடுகளை அமைக்கவில்லை இது குறித்து களவிஜயம் ஒன்றினை மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேற்கொண்டு அந்த மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், இதற்கமைய விவசாயத்திணைக்கள அதிகாரிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரிகள் இதுவிடயத்தை நேரில் பார்வையிடுவார்கள் என்று தீர்மானைக்கப்பட்டது.


தகவல்; சசிகுமார்

யாழ் முஸ்லிம்களுக்கு மீள்குடியேற்றத்தில் சமவாய்ப்பு வழங்கப்படும்; மாவை யாழ் முஸ்லிம்களுக்கு மீள்குடியேற்றத்தில் சமவாய்ப்பு வழங்கப்படும்; மாவை Reviewed by Madawala News on 9/27/2016 04:49:00 PM Rating: 5