முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முஸ்லிம் கூட்ட‌மைப்பை உறுவாக்கி செயற்படவேண்டும்



-பைஷல் இஸ்மாயில் -
நாட்டில் முஸ்லிம்க‌ள் எதிர் கொள்ளும் பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம் கொடுக்கும் வ‌கையில் முஸ்லிம் க‌ட்சிக‌ள் அனைத்தையும் இணைத்து அதன் மூலம் ஒரு முஸ்லிம் கூட்ட‌மைப்பை ஏற்ப‌டுத்துவ‌த‌ற்கு அகில‌ இல‌ங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌யார் என்ற க‌ருத்தை முஸ்லிம் உல‌மா க‌ட்சி ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு முழுமையான ஆதரவுகளை வழங்கயிருப்பதாகவும் உலமாக் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் இன்று (11) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளும‌ன்ற‌த்திலும் அத‌ற்கு வெளியிலும் அர‌சிய‌ல் செய‌ற்பாட்டில் உள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் இணைந்து கூட்ட‌மைப்பாக‌ செய‌ற்ப‌ட‌ முன்வ‌ர‌வேண்டும் என்ற‌ க‌ருத்தை உல‌மா க‌ட்சி 2006 ஆம் ஆண்டு முத‌ல் இன்றுவரை வழியுறுத்தி இத‌னை ந‌டைமுறைப்ப‌டுத்தும் வ‌கையில் யாப்பு ஒன்றும் வ‌ரைய‌ப்ப‌ட்டு முஸ்லிம் க‌ட்சிக‌ளுக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌து. 

அந்த யாப்பின்படி முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் த‌னித்த‌லைமை என்றில்லாது அனைவ‌ரும் ச‌ம‌ த‌லைவ‌ராக‌ செய‌ற்ப‌ட‌ வேண்டும் என்றும் செய‌லாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌டுப‌வ‌ர் மேற்ப‌டி க‌ட்சிக‌ளின் செய‌லாள‌ர்க‌ளுக்கிடையில் நிர்வாக‌ ச‌பையின‌ரின் தேர்த‌ல் வாக்க‌ளிப்பு மூல‌ம் தெரிவு செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ அந்த யாப்பில் சொல்லியிருந்தோம். ஆனாலும் முஸ்லிம் கூட்ட‌மைப்பை உருவாக்கும் எம‌து சிந்த‌னைக்கு முஸ்லிம் க‌ட்சிக‌ளிட‌மிருந்து வ‌ர‌வேற்பு கிடைக்க‌வில்லை இதனால் என்ப‌து ச‌மூக‌த்துக்கே பெரும் ந‌ஷ்ட‌மாகும்.

ஆனாலும் இத‌ன் தேவையை முழு ச‌மூக‌மும் இன்று ந‌ன்குண‌ர்ந்துள்ள‌மை நினைக்கும்போது ஒரு ம‌கிழ்வைத் த‌ருகிற‌து. அதேபோல் இவ்வாறான‌ கூட்ட‌மைப்புக்கு த‌யாரென‌ அகில‌ இல‌ங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌யார் என்ற க‌ருத்தை அத‌ன் உப‌ த‌லைவ‌ர் எம்.ஜ‌மீல் கொழும்பிலுள்ள கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மிக ப‌கிர‌ங்க‌மாக‌ அறிவித்திருந்தார். இதன் மூல‌ம் அக்கட்சி முஸ்லிம் ச‌மூக‌த்தின் மீதுள்ள வெளிக்காட்டுகின்றது என்பதை உல‌மா க‌ட்சி இச்சந்தர்ப்பத்தின்போது பாராட்டுகிற‌து.

ஆக‌வே முஸ்லிம் க‌ட்சிக‌ள் அனைத்தும் ஒன்றிணைந்து "முஸ்லிம் க‌ட்சிக‌ளின் கூட்ட‌மைப்பு" என்ற‌ பெய‌ரில் ஒரு வழுவான கூட்ட‌மைப்பை ஏற்ப‌டுத்தி எமது சமூகத்துக்கு உரமூட்டி செய‌ற்ப‌ட‌ முன்வ‌ருமாறு அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளையும் உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து என்று கூறினார்
முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முஸ்லிம் கூட்ட‌மைப்பை உறுவாக்கி செயற்படவேண்டும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முஸ்லிம் கூட்ட‌மைப்பை உறுவாக்கி செயற்படவேண்டும் Reviewed by Madawala News on 9/11/2016 11:05:00 AM Rating: 5