Oceas

முஸ்லீம்களின் விருப்பம் இல்லாமல் இணைக்க முடியாது !


இணைந்த வடகிழக்கில் அதிகார பகிர்வு என்ற இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை எனவும் அது கிழக்கில் வாழும் பெரும்பான்மை முஸ்லீம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் எனவும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊடக பேச்சாளர் பா உ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத தடை ஆட்டத்தின் கீழ் விடுதலை புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரனையில் அவர் சார்பாக ஆஜரான சுமந்திரன் அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2010 தமிழரசு கட்சின் தேர்தல் விஞ்சாபனத்தில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதில் எதுவித மாற்றங்களும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ள அவர் வடகிழக்கு இணைப்பில் கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம்களுக்கு அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


முஸ்லீம்களின் விருப்பம் இல்லாமல் இணைக்க முடியாது ! முஸ்லீம்களின் விருப்பம் இல்லாமல் இணைக்க முடியாது ! Reviewed by Madawala News on 9/30/2016 11:31:00 AM Rating: 5